என் இதய கூட்டில் வாழும் காதல் 555

உயிரானவளே...


அழகான பள்ளி பருவத்தில்

சுகமான காதலை சுமந்துகொண்டு...


சொல்லாமலே நாம்

பேசி மகிழ்ந்தோம்...


இருவரும் சேர்ந்தே

சென்ற அந்த நாள்...


கோவிலில் நீ

பக்தியுடன் சுற்றிவர...


நான் காதலோடு

உன்னை சுற்றிவர...


இன்று ஏனோ நீ ஒரு திசையில்

நான் ஒரு திசையில்...


உன் குடும்பம் உன்
வீடு என்று நீயும்...


என் குடும்பம் என்
வீடு
என்று நானும்...


இன்று நினைத்து

பார்த்தாலும்...


அந்த அழகிய

காதல் சுகமாக...


என் இதய கூட்டில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Apr-19, 4:01 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1189

மேலே