சவால்தான்

ஆழ்கடலில் சிற்பிகள் அதனுள்ளே முத்துக்கள்
அகழ்ந்தெடுக்க மனிதன் முகமூடி போட்ட கள்வனாய்
அணுவளவும் அச்சமின்றி நுழைகின்றான் .
நுழைந்தவனோ ஆழ்கடலின் குழந்தையாம்
செல்வம் மிக்க சிற்பிகளை
கயவன் மனிதன் கன்னமிட்டு செல்கின்றான்
ஆழ்கடலின் அடி வயிற்றில் பற்றியெரியும் கோபம்
பொங்கியெழும் சுனாமியோ, சூறாவளியோ , பூகம்பமோ
இது புரியவில்லை மனிதனுக்கு .
ஆழ்கடலின் கொந்தளிப்பால்
இத்தனையும் நடக்குது என்று சிந்திக்காத மனிதன்
ஆழ்கடலில் குழந்தைகள் சிற்பி மட்டுமா/
ஆசையுடன் பெற்றெடுத்த உயிரினங்கள் எல்லாம்
தத்தளிக்கிறதே /
மனிதன் கரங்களில் அகப்படாமல்
தப்புவதற்கு புகலிடம் தேடி ஆழ்கடலுளுள்
ஒழிந்து கொள்கின்றனவே ,
விடுவானா மனிதன்
சுழியோடி அல்லவா சூறையாடுகின்றான்.
ஆழ்கடலில் அதலபாதாளம் வரை சென்று திரும்பும்

மனிதனே / சற்று சிந்தித்து பார்/ ஆழ்கடலின் குரல்......

எழுதியவர் : பாத்திமாமலர் (4-Apr-19, 11:30 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 57

மேலே