காது மடலில் தவழுகிற

பாதம் இரண்டும் பாய்ந்தோட
பயந்த கண்கள் உருண்டாட
உருண்ட முகமோ சிவப்பாக
போவது எங்கே பெண் மானே

நீல நிறத்தில் உடை பூட்டி
நீண்ட கூந்தலில் மலர் சூட்டி
பார்க்க மயிலாய் எழிலாக
பரவசமூட்டும் பெண் மானே

காது மடலில் தவழுகிற
கொவ்வை வாயால் பேசுகிற
செல்லிடை பேசியாய் நான் மாற
சம்மதம் தருவியோ விண்மீனே

கண்ணில் ஆடும் விழியாக
கருத்தை கூறும் மொழியாக
காத்து நிற்பேன் உனை நானே
கண்ணசைவில் சம்மதம் சொல் தேனே.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (4-Apr-19, 2:39 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 132

மேலே