நீ

பௌர்ணமி நிலவாய்
களங்கமின்றி நீ

காலம் கருணையின்றி
புரட்ட

தேய் பிறையாய்
சுயநலமின்றி நீ

போராடி தோற்று
காணாது போகும்

அமாவாசையாய்
இன்னும்

எவ்வளவு காலம் நீ

மாறிவிடு சுட்டெரிக்கும்
சூரியனாய் நீ

ஆணுக்கு மட்டும்
உவமையா சூரியன்

எரித்தவள் தானே
நீ பெண்ணே?

எழுதியவர் : நா.சேகர் (4-Apr-19, 11:12 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : nee
பார்வை : 60

மேலே