புத்தாண்டு மலர்ந்தது

புது மழைத்துளி பூமியில் விழுந்திட
பூமி தன் செழிப்பை உணர்ந்திட
புதுத்துளிர் பூக்களுடன் வெளிவர
பூமகள் தன் சிரிப்பை வெளியிட
பூக்களும் கொத்தாக மலர்ந்திட
புதுக்கதிரும் நிலம்நோக்கி சாய்ந்திட
புதுமணம் மாறாமல் அறுத்து அதை பறையிலிட
பூவையரும் நிலமதனில் மாக்கோலமிட
பூக்களை புதுமையாக அழகுடன் வைத்திட
புதுக்காலை பொழுது பொலிவுடன் புலர்ந்திட
கண்திறக்கும் வேளை மங்களமாய் நிலைத்திட
சுபம் நிறைந்த பொருள்களை கண்டிட
புது வருடம் மாசில்லாமல் மலர்த்ததுவே !!

எழுதியவர் : கே என் ராம் (14-Apr-19, 7:16 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 80

மேலே