எல்லாருக்கும் முன்வைப்பத் தொகை deposit போகும்டா

தம்பி நம்ப எலவம்பட்டித் தொகுதில நாந்தான்டா செயிப்பேன். என்னை எதுத்து நிக்கற அத்தனை பேருக்கும் முன்வைப்புத் தொகை(deposit) போறது உறுதிடா.
@@@@
எப்பிடி இவ்வளவு உறுதியாச் சொல்லறீங்க?
@@@@
2021 தேர்தலுக்குக்காக நான் கடந்த மூணு வருசமா கடுமையா உழைக்கிறது உனக்குத் தெரியாதா?
@@@@
என்ன அண்ணே இப்பிடிக் கேட்டுடீங்க? நம்ம தொகுதில 1,55,000 வாக்காளர்கள் இருக்கறாங்க. இன்னிக்கு மதியம் வரை ஒரு லட்சம் வாக்காளர்கள் கால்ல விழுந்து கும்பிட்டு அவுங்களுக்குப் பாதபூசை பண்ணிருக்கிறீங்க. வாக்குப் பதிவுக்கு இன்னும் முப்பத்திரண்டு நாள் இருக்குது. அதுக்குள்ள இன்னும் பத்தாயிரம் பேருக்காவது பாதபூசை பண்ணிடுவீங்க. செய்தித்தாள் தொலைக் காட்சிகளில் உங்க பேரு பிரபலம்.
@@@@
ஆமாம்டா தம்பி. இந்த பக்கிரிசாமி இப்ப "பாதபூசை பக்கிரிசாமி"டா. எங் கணக்குப்படி எனக்கு ஒரு லட்சம் வாக்கு கிடைக்கும்டா. சுயேச்சையா நின்னாலும் நாந்தான்டா செயிப்பேன். என்ன எதுத்து நிக்கற எல்லாருக்கும் முன்வைப்புத் தொகை(deposit) பறிபோகும்டா. என்னுடைய வெற்றி மற்றவர்களின் 'டெபாசிட்' இழப்பெல்லாம் கின்னஸ்ல பதிவாகி வரலாறு படைக்கப் போகுதடா தம்பி.
@@@@
ரொம்ப சந்தோசம் அண்ணே.

எழுதியவர் : மலர் (15-Apr-19, 9:37 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 136

மேலே