தத்துவம்
அமைதி தேடி மோனத்தில் முனிவராய் நான்…..
பெண்ணுருவாய் வந்தோர் மோகமுள் தைக்க
மோனம் கலைந்தது காமத் கடலில் மிதந்தேன்
நான் , மோகம் போனதும் மோனம் நாடியது மனம்
நீந்தி கரை ஏற ஓடம் தேட கையில் கிடைத்தது
ஓர் மரப்பலகை , அதைப்பிடித்து எப்படியோ
கரையேறி விட்டேன் , என்னையுணர்ந்து நான்
அப்பலகை எங்கே என்று பார்க்க அது
காணக்கிடைக்கவில்லை, தெளிந்தது மனம்
அப்பலகையே மோகம் தீர்ந்த என்னுடலுக்கு
காமம் நீக்க 'அவன்' அளித்த ஓடம் என்று.
" பிறவிப் பெருந்துயர் நீந்துவார் நீந்தாதார்
இறைவனடி சேரா தார் "
,