சித்திரச்சீலை
கட்டழகை கட்டியணைக்க,கண்டாங்கி தொட்டொடுக்க,
அக்கம் பக்கம் அளவெடுத்து,
அள்ளாமல் கிள்ளாமல் மடிப்பெடுத்து,
தொட்டாற் சிணுங்கி இடுப்பில்,
குழைந்து செல்லும் மடிப்பில்....
மனதழகை மறைக்க,
முந்தானை முற்றெ டுக்க,
முன் பின் கையிலெடுத்து,
சிந்தாமல் சிதராமல் சிலை ஏறிய பல்லாக் காய் தோளில் சுகம் காணுதே....