தை திருநாள்
மாதம் பிறந்ததே..
மனதும் நிறைந்ததே...
நன்றி சொல்லவே, நேரம் சூழ்ந்ததே....
சூரியனே எழுந்து வா..
சுழலும் காற்றே நடந்து வா...
பறவைகளே மகிழ்ந்து வா....
கரு மேகமே மகிழுந்தில் வா.....
கொட்டும் மழையே புத்தாடை அணிந்து வா....
இரவு காவலனே இறங்கி வா...
செயற்கையான இயற்கை இயந்திரங்களே ஓய்வு கொள்ள வா..
ஓருயிரே நிலத்தின் ஆருயிரே தித்திக்க வா..
இயற்கையின் சொந்தங்களே,
இந்த உழவனின் பந்தங்களே...
வாகனம் பிடித்தாவது எங்கள் வீட்டை அடை....
எங்கள் நன்றி பெற்று மகிழ்ச்சியோடு கொடு விடை.....
*அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்*
தமிழுடன்
*_கதா_*