ஒரு ஊடகவியலாளன் கொலை

முன்னுரை
நாட்டில் அரசியல்வாதிகள் தன்னிச்சை படி தங்களின் அதிகாரத்தைப் பாவித்துச் செய்யும் அட்டூழியங்கள் கணக்கில் அடங்காது, பொது மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்லும் செயலில் தீவிரமாகச் செயல் படுவதே ஒரு ஊடகவியாலானின் தர்மத்தை மதிக்கும் தொழில். இதைச் செய்வதில் பெரும் ஆபத்துகள் தங்கியுள்ளது. சௌதி அரேபியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை எடுத்துச் சொன்ன ஊடகவியாலாலரை துருக்கி நாட்டில் வைத்து சௌதி அரசு கொலை செய்தது . இது போன்று பல கொலைகள், பல நாடுகளில் நடந்துள்ளன. இதனை ஐ நா சபை பாராமுகமாக இருக்கிறது. மனித உரிமை மீறல்களில் பெரும் பங்கு வகிக்கும் இலங்கையில் நடந்த தமிழ், சிங்கள. முஸ்லீம் ஊடகவியாலர்களின் கொலைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது . அதில் பேனா துவக்கை விட வல்லமை உள்ளது என்ற கொள்கை உள்ள லசந்தா வின் கொலை பற்றிய புனைவு கலந்த கதை இது

****

லசந்தா 1958 இல் கொழும்பு 13 இல் வசதியான குடும்பத்தில் ஜெயசிங்கா என்ற அரசியல்வாதியின் ஆறு பிள்ளைகளில் கடைசி மகனாகப் பிறந்தவர். சிறு வயதிலேயே பேச்சு. எழுத்துத் திறமை உள்ளவர். எதற்கு எடுத்தாலும் ஏன்?, எப்படி? எதற்காக? போன்ற கேள்விகளை எழுப்புபவர். எதையும் தர்க்க ரீதியாக ஆராய்ந்து எழுதுபவர்.
லசந்தா வின் தந்தை ஜெயசிங்கா, கொழும்பு
மாநகர சபையின் உதவி நகர பிதாவாக இருந்தவர். லசந்தா கொட்டாஞ்சேனை பரிசுத்த பெனெடிக்ட் கல்லூரியில் படித்தவர். அவருக்குப் பிடித்த விளையாட்டு கிரிக்கெட் . லசந்தா வின் தந்தைக்கு வசதி இருந்த படியால் மகனை லண்டனுக்கு தன் அண்ணன் வீட்டில் இருந்து படிக்க அனுப்பினார். லண்டன் ஏ லெவல் வரை படித்து பின் இலங்கைக்குத் திரும்பி, சட்டம் படித்து, பட்டம் பெற்றார் எட்டு வருடங்கள், பல வழக்குகளில் ஆஜராகி வெற்றியும் பெற்றார்

சட்டம் படித்தவர்கள் பலர் அரசியலில் ஈடுபடுவது சகஜம். லசந்தா அதுக்கு விதிவிலக்கு இல்லை. பேசுவதிலும், எழுதுவதிலும் திறமையுள்ள லசந்தா , ஊடகவியல் துறையில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். ஐலன்ட்(Island) . சன் (Sun) ஆகிய இரு ஆங்கில பத்திரிகைகளில் தனது ஊடகவியலின் திறமையைக் காட்ட ஆரம்பித்தார் .அனேகமாகத் திறமை உள்ள ஊடகவியலாளன் அரசியல் கட்சியின் வலையில் விழுவதுணடு . தலைவர்களுக்கு மேடைகளில் பேசுவதுக்குப் பேச்சு எழுதிக் கொடுப்பது ஊடகவியலான். .அதனால் தந்தையின் அறிமுகத்தின் மூலம் அதிர்ஷ்ட வசமாகப் பிரதம மந்திரியாக இருந்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் பிரத்தியேக செயலாளரானார் லசந்தா . ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இனத் துவேச கொள்கைகளைப் பிடிக்காததால், கட்சி தாவி ஐக்கிய தேசீய கட்சிக்கு மாறி, ரணில் விக்கிரமசிங்காவின் ஆலோசகரானார். எது தனக்குச் சரியெனப் படுகிறதோ அதைச் சொல்ல லசந்தா தயங்க மாட்டார். அப்போது அவருக்கு ரணிலுடன் இருந்த நெருக்கத்தை வைத்து அவரை அப்போது எதிர்க் கட்சி தலைவர் என அரசியல்வாதிகள் அழைத்தனர். அவர் பேசும் போது சேர். மேடம் என்று பேசமாட்டார். அவர்களின் பெயர் சொல்லி அழைப்பார்.

1994 இல சண்டே லீடர் (Sunday Leader) என்ற ஆங்கிலப் பத்திரிகையை லசந்தா ஆரம்பித்தார். அந்தப் பத்திரிகையில் அரசையும் , விடுதலைப் புலிகளையும் விமர்சித்து எழுத் தொடங்கினார். அதற்கு நல்ல வரவேற்பு மக்களிடம் இருந்தது.அப்படி துணிந்து எழுதும் பத்திரிகைகள் மிக குறைவு .பல பத்திரிகைகள் அரசியல் கட்சிகளுக்கு சாமரம் வீசும் பத்திரிகைகளாக செயல் பட்டன . லசந்தாவின் பத்திரிகை சுயாதீன பத்திரிகையாகக் கருதப்பட்டது.

ஒரு கட்டத்தில் பத்திரிகை நடத்துவதை விட்டு திரும்பவும் தான் வக்கீல் தொழிலுக்குத் திரும்பச் சிந்தித்ததாகவும் ஆனால் எழுத்து துறையில் ஆர்வம் இருந்த படியால் தனது எண்ணத்தை மாற்றியதாக நேர்காணல் ஒன்றில் சொன்னார் . டைம் சஞ்சிகைக்கு செய்தியாளராகவும் கடமையாற்றினார். “காலை வணக்கம் ஸ்ரீலங்கா” என்ற வானொலி நிகழ்ச்சிக்கு அரசியல் விமர்சகராக கடமையாற்றினார்.
அவரின் பத்திரிகையில் அரசில் உள்ள அமைச்சர்களின் தில்லு முல்லுகள், ஊழல்களைப் பற்றி எழுதி அவர்களின் அதிருப்தியைச் சம்பாதித்தார்.

1995, யில் லசந்தா வையும் அவரின் முதல் மனைவி ரெயினையும் வாகனத்தில் இருந்து வெளியே இழுத்து ஒரு சிலர் தாக்கினார்கள். தங்கள் வாழ்க்கையில் இது போன்ற தாக்குதல்களைத் தாங்கள் எதிர்பார்த்ததாக ரெயின் சொன்னார் . “உங்களையும் உங்களின் குழந்தைகளைக் கொலை செய்யப் போகிறோம் உங்கள் கணவரை எங்களை பற்றி எழுதுவதை நிறுத்தச் சொல்லுங்கள “ என்று பல தொலைப் பேசி அழைப்புகள் தினமும் அவருக்கு வந்த படியே இருந்தது என்றார்

2000 ஆம் ஆண்டில், ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மேல் குற்றஞ்சாட்டிய குற்றச்சாட்டுக்காக லசந்தா மேல் சந்திரிக்கா வழக்கு தொடர்ந்த, போதிலும்,லசந்தாவுக்கு எந்த பெரிய தண்டனையும் வழங்கப்படவில்லை. 2002 இல், அவருக்கு எதிராகத் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக ரெயின் லசந்தா விடம் இருந்து பிரிந்து தனது மூன்று குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார்

மஹிந்த ராஜபக்க்ஷ ஜனாதிபதியானதும் அவர் செய்யும் ஊழல்கள் பற்றி தனது பத்திரிகையில் லசந்தா எழுதத் தொடங்கினார். 2008 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்தா, தன்னைப்பற்றிய பத்திரிகை செய்திகளை வாசித்து கோபம் கொண்டார். லசந்தாவை தன் வீட்டுக்கு அழைத்து தன்னை பற்றி அவரின் பத்திரிகையில் எழுதுவதை நிறுத்தா விட்டால் அவர் அதன் விளைவினை சந்திப்பார் என்று கூச்சலிட்டார். ஜனாதிபதி அவரை ஒரு "பயங்கரவாத பத்திரிகையாளர்" என்று குற்றம் சாட்டினார் .
லசந்தா கொலை செய்யப்பட ஒரு கிழமைக்கு முன்பு அவர் வீட்டுக்கு இறந்தவர்களுக்கு அனுப்பும் பூச்செண்டு அவரின் விரோதிகளால் அனுப்பி வைக்கப்பட்டது. அது லசந்தா வுக்கு ஒரு எச்சரிக்கையாக இருந்தது. லச ந்தவின் கொலைக்குப் பின் அவர் நடத்திய பத்திரிகை ராஜபக்ஷவால் விலைக்கு வாங்கப் பட்டது . அதன் பின் அந்த பத்திரிகை ஜனாதிபதியை புகழ்ந்து எழுதத் தொடங்கியது . அது மட்டும்மல்ல முதலில் ராஜபக்சவை கண்டித்து எழுதியது தவறு என்று மன்னிப்புகோரி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்த என்பவருக்குக் கடிதம் பத்திரிகையில் எழுதப்பட்டது கோதா என்பவர் ராஜபக்சவின் தம்பி. பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது பல மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டு இருந்தார. ஒரு தடவை குண்டு தாக்குதலிலிருந்து உயர் தப்பினார் . ஜனாதிபதியாக இருக்கும் தன் அண்ணனின் எதிரிகளை எச்சரித்துப் பல பயமுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடு பட்டார். கொலை செய்யப்பட முன் தன பத்திரிகையில் தனக்கு மரணம் ஏற்படின் அதக்கு அரசே பொறுப்பு என்று லசந்தா துணிந்து எழுதினார்.

மகிந்த ஆட்சிக்கு வந்ததும் தன் தம்பி கோதாவைப் பாதுகாப்பு அமைச்சுக்குச் செயலாளராக நியமித்தார் கோதா பல ஆயுத ஒப்பந்தங்களில் ஊழலில் ஈடு பட்டிருந்தார் . அவர் கையெழுத்து இட்ட ஆயுத ஒப்பந்தங்கள் பற்றி ஆதாரங்களை நீதிபதியிடம் வழங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர் லசந்தா 2009 ஜனவரி 8 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் அவர் பணிபுரிய வாகனத்தில் வேலைக்குப் போகும் வழியில் தெஹிவல என்ற இடத்தில் லசந்தா வை கொலை செய்ய நான்கு பேர் கொண்ட பாதாலஉலக கூலிகள் அமர்த்தப்பட்டனர் . இரு மோட்டார் சைக்கிளில் சென்ற கொலையாளிகள் லசந்தா வின் காரை வழி மறித்து, வாகனத்தின் ஜன்னலைத் திறந்து, அவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டனர். அவரை கொழும்பு தெற்கு களுபோவில பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர் . ஆரம்பத்தில் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஹெலிகாப்டர் மூலம் சில மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைக்கு மருத்துவ உதவியாளர்களில் 20 பேரின் சிறப்புக் குழு ஒன்று அழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மணிநேர அறுவை சிகிச்சை செய்திருந்தாலும், லசந்தா வின் தலையில் சூடு பட்டிருந்ததால் அவர் உயிர் இழந்தார்
****
ஊடகவியாளர் லசந்தா வின் படுகொலை ஒரு சர்வதேச கண்டனத்தை ஏற்படுத்தியது. "சிறிலங்கா தனது திறமையான, தைரியமான மற்றும் உண்மையை எழுதும் ஊடகவியலாளனை இழந்து விட்டது" என்றும், "ஜனாதிபதி மேலும், அவரது கூட்டாளிகள் மற்றும் அவருக்குச் சார்பான அரசாங்க ஊடகங்கள் மீது நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டன , ஏனெனில் அவர்கள் லசந்தா வுக்கு எதிராக வெறுப்புணர்வை தம் கட்சியில் ஏற்படுத்தி, பத்திரிகைக்கு எதிரான வன்முறையைத் தூண்டி விட்டனர் .தங்கள் தவறுகளை ஊடகங்கள் சுட்டிக் காட்டுவது அரசுக்கு பிடிக்கவில்லை. ஜனாதிபதி தம்மீது மக்கள் பிழை கண்டுபிடிக்காமல் இருக்க லசந்தாவின் படுகொலைக்கும் தனக்குத் தொடர்பு இல்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் அறிப்கை ஒன்றை வெளியிட்டார் . அதோடு ஒரு திறமையான லசந்தா போன்ற ஊடகவியலாளனின் மறைவு இலங்கைக்கு பெரும் இழப்பு என்று முதலை கண்ணீர் வடித்தார் மற்றும் லசந்தா வின் மறைவு தன் குடும்பத்துக்குத் துக்கமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்ததாகச் சொன்னார். கொலையை அவர் ஒரு முழுமையான போலிஸ் விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் சொன்னார் . அதெல்லாம் ஒரு வெறும் கண்துடைப்பே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இது ஒரு ஜனநாயக விரோத சதியின் ஒரு பகுதியாகவும், அரசின் விமர்சகர்களை வன்முறை மூலம் அமைதிப்படுத்தும் முயற்சி எனவும் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டினார் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஜனவரி 9 ம் தேதி லசந்தா வின் படுகொலைக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்தது நோர்வே, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்தன. அதே நேரத்தில் உலக வங்கி அதன் மீதான அக்கறையை வெளியிட்டது. ஜனாதிபதி மஹிந்த டைம் பத்திரிகையில் கூறினார்: " லசந்தா என்னுடைய நல்ல நண்பர். அவர் ஆபத்தில் இருப்பதாக எனக்கு ஒருவர் மூலம் தெரிவித்திருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக, அந்த செய்தி எனக்குத் தாமதித்துக் கிடைத்த போது நான் அவரை . அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்குச் சென்று முறையிடும் படி சொன்னேன்.
வெளியுறவு மற்றும் காமன்வெல்த் விவகாரங்களுக்கான பிரித்தானிய வெளியுறவுச் செயலர், ஒரு அறிக்கையில் கூறியதுடன், லசந்தா வை கொலை செய்ததைக் கண்டித்து, இந்த சம்பவங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளின் கடமை என்று கூறினார்.
அத்தகைய வெட்கக்கேடான தாக்குதல்களை நாங்கள் கண்டனம் செய்கிறோம். ஒரு முழுமையான மற்றும் சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ளுமாறு உறுதிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க இலங்கை கடமைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

லசந்தாவின் படுகொலைக்குப் பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கத்திடம் உலக பத்திரிகை சுதந்திர தினத்தன்று பான் கி மூன் முன்வைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. லசந்தா வின் மரணத்திற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் நாட்டை விட்டு அவரின் மனைவி வெளியேறினார்.

மகிந்த அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து பொறுப்புக்களையும் மறுத்து வந்த பின்னர் விசாரணைக்கு அழைப்பு விடுத்தது. கடுமையான ஊடக அழுத்தம் இருந்த போதிலும், யாரும் கைது செய்யப்படவில்லை, மற்றும் கொலை தொடர்பான விசாரணை "ஒரு மூடிமறைவாக முடிவடையும்" என்றும், ஒரு சுயாதீனமான ஊடகவியலாளர் பாதுகாப்புக்கான பாதுகாப்புகள் வெடிக்கின்றன என இலங்கை ஊடகங்கள் ஊகிக்கின்றன.

ஜனாதிபதி மஹிந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைய இது போன்ற பல உரிமைமீறல்கள் காரணமாக இருந்தன பின்னர், மகிந்தவுக்கு பின்னர் ஜனாதிபதியாக வந்தவர் முன்னாள் அரசாங்கம், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்சே படுகொலைக்கு உத்தரவிட்டதான குற்றச்சாட்டுக்களை விசாரித்தனர்.

தற்போதைய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேக்கா லசந்தா படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினார்கள். . சரத் பொன்சேகாவின் கருத்தின்படி படுகொலைக்கான உத்தரவு கோதாபாயாவால் வழங்கப்பட்டது.
2016 ல் ஓய்வுபெற்ற ஒரு உளவுத்துறை அதிகாரி தற்கொலை செய்துகொண்டார், அவர் கொலையாளியாகவும், விசாரணையில் கைது செய்யப்பட்ட உளவுத்துறை அதிகாரிகளிடம் குற்றமற்றவராகவும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

லசந்தாவை கொலை செய்து பத்து வருடங்களாகியும் இன்னும் கொலையாளியையும் கொலை செய்ய உத்தரவிட்ட வரையும் இன்னும் காண்டுபிடித்து வழக்கு தொடர அரசு தவறி விட்டது. அந்த கொலைக்குச் சூத்திரதாரி யார் என்று தெரிந்தும் அரசியல் செல்வாக்கு காரணத்தால் சூத்திரதாரியை அரசு இன்னும் கைது செய்யவில்லை . இந்த உலகறிந்த மனித உரிமை மீறல் சம்பவம் ஐ நாசபையிலும் பேசப்பட்டது

லசந்தா வின் படுகொலை நடந்து பல வருடங்களுக்கு பின் அவரின் மகள் அஹிம்சா என்பவர் அமெரிக்க பிரஜயான கோதபாய மீது நஷ்ட ஈடு கோரி அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதன் முடிவு தெரிய சில வருடங்கள் எடுக்கலாம் .
****

எழுதியவர் : Pon Kulendiren (16-May-19, 6:52 am)
பார்வை : 45
மேலே