என்னவனுக்காக❤

"எந்தன் மன்னவேனே! நீ எங்கு இருக்கிறாயோ?? என் இதயத்தின் சிம்மாசனம் சினுங்குகிறது உந்தன் அமர்வுக்காக.... "

"எந்தன் கலைஞனே! உந்தன் முகத்திரை எந்தன் விழித்திரையில் பட்டு தெரிக்கும்
நாளுக்காக விழித்து கொண்ட இருக்கிறது என் மனத்திரை..."


"எந்தன் கரும்பனே!அன்பை சொட்டு சொட்டாக கொட்டி புது புது அன்பு மெட்டுப் போட்டு உன்னை அரவனைக்க அலும்புகிறது என் வயது...."

"எந்தன் வேரானவனே! என் மேனியின் அலங்கார கோலங்களை நீ ரசிப்பதற்காக
ரசனையிடமே திட்டு வாங்கி திக்கிமுக்கி நிற்கிறது என் இயல்பு ...

"எந்தன் நிழலானவனே! உனக்காக சமையலயே சமைத்து உந்தன் நாவில் சேர்த்து நயக்கவைக்க நனைகிறது எச்சு...."

"என் உதிரமானவனே! மொன மொழிகளை உன் நெஞ்சான மொன அறையில் கூறுவதற்காக... மொனம் என்ற பயிருக்கு பசளை போடுகிறது என் எண்ணங்கள்..."

"ஆசையாளனே! பூகோளமயமான உலகத்தை காதல்மயமாக்க வா... என்று உன்னை அனுதினமும் அழைகிறது
என் வெட்கதளம்..."

"குட்டி கிராம குடிசை...
குறுகிய குயில் ஓசை...
நிசப்தமான காற்று...
மொன மொழியை உடைத்து எறிய விரும்பும் வார்தைகள்...
பறவையின் ஒலி காதல் சூழலுக்கு இசை
போட...
வானில் உள்ள மின்னல்கள் இருவருக்கும்
வரிகள் எழுத....
உன் இரு விழி மேகம் மோத
காதல் மழை உனக்கும் எனக்கும் மட்டும்
பெய்ய....
நீ வருவாயா???
*(இஷான்)*

எழுதியவர் : இஷான் (20-May-19, 5:43 am)
சேர்த்தது : இஷான்
பார்வை : 306

மேலே