வாஞ்சை

இந்த வாஞ்சையின்
வடிவம்
அன்பினால் ஆனதன்றோ,
வெறுப்பை
வேறாக்கிப்பார்க்கிறேன்,
எதிராய் அன்பே
எதிராகியது.

அன்பினூற்றில்
அவ்வவ்ப்போது பீரிடும்
இந்நேசம்தான்
வாடாதிருக்கிறது
விட்டுவிடாது.

வெறுப்பென்பது
வேரொன்றுமில்லை
விரும்புதலின்
வேர் பிடித்தலேயாம்.

எழுதியவர் : சபீரம் சபீரா (20-May-19, 9:56 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 46

மேலே