கருவறை

இருள் சூழ்ந்த போதும்
என்னுள் பயம் ஏதும் இல்லை,

விழி திறக்கா விடினும்
மனதில் வலி ஏதும் இல்லை .

நகர முடியா இடத்திலும்
சிம்மாசனத்தில் இருப்பதுபோல் ஓர் உணர்வு ,

அவ்வப்போது
சிறு சிரிப்பு சத்தம் கேட்பதுண்டு ..

சிரிப்பு சத்தத்தின் மகிழ்ச்சியால்
துள்ளி குதித்தால்
யாரோ வலி கொண்டு துடிப்பது போல்
ஓர் உணர்வு

உறவாட யாரும் இல்லா போதும்
செவிகளில் கேட்கும் வார்த்தைகள்

அன்பே கண்ணே என
அழைக்கும் சத்தம்

இதுவரை காணாத
வாசம் ..


இது தான் கருவறையோ ..

பிறப்பவன் இங்கே
மகிழ்சியாய் இருக்கையில்
சுமப்பவள் அங்கே
வலி கொண்டு அழுகிறாள்

வலி கொடுக்க மறுத்து
வெளி வர துடித்தேன்

வருகை அறிந்து
கூப்பாடு போட்டு ஊரை கூட்டினாள் ..

தாயின் அழுகுரல் கேட்டு
மனம் தாங்காது
நானும் அழுதேன்

விழிகளில் கண்ணீரும்
மனதில் மகிழ்ச்சியும் கொண்டவளாய்
என்னை தொட்டு தூக்கினாள்

அன்பே என அவள் அழைக்கையில்
யார் என்பதை அறிந்தேன்
கண்ணே என அழைக்கையில்
கண் திறந்து பார்த்தேன்

கடவுளின் முகத்தை ...
என் தாயின் முகத்தை.

மகிழ்ச்சியில்
என் பிஞ்சு கைகளை கொண்டு
அவள் கைகளை இருக்க பிடித்துகொண்டேன்

கருவறையில் இருந்த உணர்வை
உன் மடியினில் தருவாயா என ??
நான் கேட்பதை புரிந்து கொண்டவள்
அக்கணமே என்னை தூக்கி மடியில் சாய்த்து கொண்டால்
மகிழ்ச்சியாய் நானும் உறங்கினேன்
அவள் பாடிய தாலாட்டு பாடலில் .

எழுதியவர் : ரஞ்சித் வாசு (28-May-19, 2:12 pm)
சேர்த்தது : Ranjith Vasu
Tanglish : karuvarai
பார்வை : 824

மேலே