இரவு
ஆதவன் குடதிசையில் இறங்க ஆதவம் போனது
வானளாவி இருள் வந்து சூழ இருளிலும் பகல் காண
குண திசையில் திங்கள் தன்னொளிபரப்பி உதிக்க
சப்தமான பகலும் போய் எங்கும் நிசப்தம் -உடலால்
உழைத்து ஓய்ந்த என்னை மடியில் தாலாட்டி தூங்கவைத்த இரவு