பிறந்தநாள் வாழ்த்து பைரவி
கவிஞர் பைரவிக்கு
பிறந்தநாள் வாழ்த்து
நீ
பாதாள பைரவி அல்ல
பாதாளத்தில்
இருக்கும் கவிகளை
பா தளத்திற்கு
அழைத்துவரும் பைரவி
நீ
ஆயிரம்
தலை வாங்கிய
அபூர்வ சிந்தாமணி அல்ல
ஆயிரம் கவியரங்கில்
கவித் தாளை வாங்கிய
கவி சிந்தியமணி
உன்
தடந் தோள்களில்
பை தொங்குவதால்
நீ பைரவி அல்ல
நட்பைத் தாங்குவதால்
நீ பைரவி
பைரவி மூன்றெழுத்து
ரமேஷ் மூன்றெழுத்து
கவிதை மூன்றெழுத்து
உன் மூச்சு பேச்சு
அனைத்தும் கவிதையே
கட்டிய சீட்டை
எடுத்து ஒடுபவர்கள்
மத்தியில்
நீ
கவியரங்க சீட்டு
கொடுக்க ஓடி வருபவர்
பைரவி
என்றால் ஒரு இசை
நீ
யாருக்கும்
தருவதில்லை இம்சை
இன்று
உன் பிறந்த நாள் அல்ல
கவிதையின் பிறந்தநாள்
கவியரங்கம்
என்றால்
அங்கே
ஈ
இருக்கிறதோ இல்லையோ
நீ இருப்பாய்
அன்பு நண்பருக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்