நன்றி நண்பா நன்றி

நன்றி நண்பா நன்றி 🤝

எங்கு சென்றாயோ
எங்கு தேடியும் உன்னை காணவில்லை
என்னை ஏனியில் ஏற்றிவிட்டு
நீ எங்கு சென்றாய்
உன் வாழ்க்கையை எனக்கு தாரை வார்த்து விட்டு
நீ எங்கு சென்றாய்
நான் இன்று பலகோடிக்கு அதிபதி
உலகத்தை ஒரு வலம் வந்து மீண்டும் புறப்பட்ட இடதுக்கே வந்துவிட்டேன்
வறுமையில் வாடியிருந்த என்னை வளர்தெடுத்தவன் நீ
என் வாழ்க்கையின் வெற்றிக்கு அஸ்திவாரம் போட்டவன் நீ
அயல் நாடு சென்றவுடன்
நான் அயலான் போல் நடந்தது ஓரளவு உண்மையே
பணி சுமை காரணமாக அப்படி நான் செய்தது மற்றவர்களுக்கு அது சரி ஆனால் உன்னிடமே தொடர்பை துண்டிக்கப்பட்டது மிகவும் தவறு.
உன்னிடம் மன்னித்து விடு என்று நான் கூறினால் அது தவறு எல்லோரும் கேட்கும் சம்பரதாய பேச்சாகிவிடும்.
உன்னை ஏன் நான் தேடுகிறேன்.
தீடிர் ஞானோதயம் ஏன்
என்று உன் உள் மனம் கேட்டும். இதற்கு என்னிடம் பதில் இல்லை.
உன்னை நேரில் சந்தித்தால் நான் என்ன செய்வேன் என்று எனக்கு தெரியாது.
உன்னை நிச்சயம் பார்க்க வேண்டும்.

எப்படி இருக்கிறாய் நண்பா
நான் சொல்லகூடாத வார்த்தை ...
அதற்கு நிச்சயம் நான்
அறுகதையே இல்லாதவன் ....
என்ன செய்வது
எனக்கு வேறு வழி தெரியவில்லை
உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்.
மன்னித்து விடு நண்பா
என்னை மன்னித்து விடு....

முதலில் எழு
நானும் சாதாரன மனிதன் தான்.
மன்னிக்கும் மனம் மானிக்க குணம்
இது நட்புக்கு கிடையாது
மாறாக உன்னை திட்டி தீர்க எனக்கு உரிமை உண்டு
ஆனால் உன்னை கண்டவுடன்
எப்படி அழைப்பது என்று நான் வார்த்தையை தேடுவதை விட உன்னை கட்டி அனைக்கவே மனம் சொல்கிறது.
குணாதிசயம் மாறுபடும்
அதில் நீ ஒரு ரகம்
நான் ஒரு ரகம்
நீ என்னிடம் மன்னிப்பு கேட்டது தவறு.
நட்பில் எதிர்பார்த்தல் இல்லவே இல்லை.
அப்படி எதிர் பார்த்தால்
அது நட்பு ஆகாது.
உன் மீது எனக்கு ஒரு துளி கூட கோபம் இல்லை, மாறாக உன் நிலைமை என்னவென்று அறியாமல் இருந்தது எனக்கு ஏக்கத்தை ஏற்படுத்தியது.
நாம் இருவரும் அறுபதை எட்டினாலும்,
நம் பழைய நட்பை மறந்துவிட முடியுமா
என் விருப்பம்
நேற்றை மறந்து விடு
வா நண்பா வா மீண்டும் நம் நட்பை நன்றாக தொடரலாம்.
நன்றி நண்பா, நன்றி ...

நட்பில் பரஸ்பரம் நன்றி சொல்வது தவறு
காரணம் நட்புபே நன்றியின் உருவம் தானே.
- பாலு.

எழுதியவர் : பாலு (13-Jun-19, 8:28 pm)
சேர்த்தது : balu
பார்வை : 948

மேலே