மகாகவி ஈரோடு தமிழன்பன் 84 ஆம் பிறந்தநாள் விழா மற்றும் ஈரோடு தமிழன்பன் ஆயிரம் நூல் வெளியீடு மற்றும் விருதளிப்பு-----------நாள் 12112016--------மலரும் நினைவுகள் --அன்று படித்த எழுத்து தளம் செய்தியைப் பகிர்கிறேன்

மகாகவி ஈரோடு தமிழன்பன் 84 ஆம் பிறந்தநாள் விழா மற்றும் " ஈரோடு தமிழன்பன் ஆயிரம் " நூல் வெளியீடு..... மற்றும் விருதளிப்பு


நாள் 12.11.2016
இடம் : முத்தமிழ்ப்பேரவை , திருவாவடுதுரை இராஜரத்தினம் கலையரங்கம் ,
இராஜா அண்ணாமலை புரம்
( எம்.ஜி.ஆர்_ ஜானகி கல்லூரி எதிரில்)

தமிழன்பன் _80 விருதுகள்:
சீதா ரவி (இதழியல்)
கமல்காளிதாஸ் ( வடிவமைப்பாளர்)
Dr. கோபி ( யாழ் அரங்கம்)
வள்ளிமுத்து ( திருக்குறள் பரப்பு)
கே.ஆர் இராசேந்திரன் (வேளாண்மை மற்றும் அதுசார்ந்த கவிதைகள்)
இளவமுதன்( காட்சி வழி ஊடகம்)
ராஜா சுந்தர்ராஜன் ( விமர்சனம்)

என்னோடு சேர்ந்து கவிதை, ஊடகம், ஓவியம் . இதழியல்,கல்வி என பல பிரிவுகளில் விருது வாங்க இருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்

இதைப் பகிர்ந்து வாழ்த்துகளையும் தந்த அகன் அய்யாவுக்கு நன்றி . குக்கிராமத்து மூலையில் இருந்தாலும் என்னையும் அங்கீகரித்து இந்த எழுத்து தளத்தில் நான் எழுதிய வேளாண்மை மற்றும் தமிழ்சார்ந்த படைப்புகளுக்கு எனக்கும் மகாகவி தமிழன்பன் அய்யாவின் பெயரால் ஒரு விருது. மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி எழுத்து தளத்துக்கும், உங்களது மேலான கருத்துகளில் என்னை உயரம்காண வைத்த தளத்தோழமைகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான நன்றிகள்.


இந்தவிருதை உங்கள் அனைவருக்கும் என் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.

என்றும் உங்கள் ஆசிகளில்
நன்றியோடு நான்
கவிக்கோ தமிழன்பன் விருது நன்றி அறிவிப்பு


பதிவு : இராசேந்திரன்
நாள் : 30-Oct-1
கிருஷ்ண சதானந்த விவேகானந்தன் • 03-Nov-2016 6:27 pm

அன்பு நண்பர் இராசேந்திரன்!
நலம். நலமே வாழ்க நீடூழி!

எழுத்து தளத்தில் தாங்கள்
எழுதிய வேளாண்மை மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகளுக்கு ்
மகாகவி தமிழன்பன் அய்யாவின் பெயரால் விருது பெற்ற செய்தி
கண்டேன். மிகவும் மகிழ்ந்தேன்.

வெற்றி புரிக்குச் செல்ல
வேதனை புரத்தைத் தாண்டு
என்றார் அண்ணா!

நீ
எட்டி வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
தட்டுத் தடுமாறாத திடமான நெஞ்சுரம்
கட்டிக் காக்கும் தன்னம்பிக்கை
கொட்டி மகிழ்ந்த ஓயாத உழைப்பு

வேதனையை வெட்டித் தள்ளி சோதனையை நெட்டித் தள்ளி
சாதனையை எட்டிப் பிடித்தாய்
விருதை தட்டிப் பறித்தாய்.

மண்ணில் விதை போடுவதற்கு முன்-
உன்னில் அதைப் போட்டு உருவாக்கி
கண்ணில் அமை கருவிழியாய் காக்க
தன்னில் அது தழைக்கும் தல விருட்சம் !

குருவிகள் நெல் அறுவடைக்கு
வரும் நாளுக்காகக் காத்திருந்தன
குவித்து விட்டாய் சிறப்பான விருது குன்றொக்கும் களஞ்சியம் - நானும்
குருவிகளோடு இணைந்து விட்டேன்
கருத்துடனே பாராட்டி மகிழ்வவற்கே.!!

நண்ணுவ எல்லாம் நலமுற்றே
நாளும் ஈட்டும் நற்புகழால்
மெத்த நலம் பெருகி குடும்ப வாழ்க்கை
மேன்மேலும் வளம் பெருகி சிறப்படைய
உலகாளும் பரம்பொருளை
வணங்கி நின்று
உள்ளம் நிறைந்து மகிழ்ந்து
வாழ்த்துகின்றேன் :!

நல்வாழ்த்துக்கள்!

இராசேந்திரன் • 15-Nov-2016 9:58 pm
நன்றி அய்யா. இன்னும் பலவற்றை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் வாழ்த்துக் கவிதை மூலம். எனக்குள் இன்னும் செழிப்பாக துளிர்விட்டிருக்கிறது அய்யா

புதுவைக் குமார் • 02-Nov-2016 9:02 pm
வாழ்த்துக்கள் அண்ணா

இராசேந்திரன் • 04-Nov-2016 8:23 pm
உம் வாழ்த்துக்கு நன்றிகள் அன்புத் தம்பியே. இளையோர் பெரியோர் என எல்லோரின் மனங்களில் நான் இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மனம் மகிழ்கிறது. தலைமுறை தாண்டிய பல படைப்புகளைப் படைக்க ஒவ்வொருவரின் வாழ்த்தும் எனக்கு உறுதுணையாக இருக்கும்.

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் • 02-Nov-2016 9:19 am
எல்லாம் புகழும் இறைவனுக்கே!இது தொடக்கம் தான் நண்பரே!இன்னும் எண்ணற்ற விருதுகள் காத்திருக்கிறது தொடருங்கள் வாழ்த்துக்கள்

இராசேந்திரன் • 02-Nov-2016 5:54 pm
என் ஆழத்தில் நிறைந்திருக்கும் உங்கள் ஈடில்லா அன்போடு நான் சென்னை செல்லப்போகிறேன். எழுதும் எல்லாவற்றுக்கும் உங்கள் வாழ்த்துகளையும் கருத்துகளையும் தந்து உற்சாகப் படுத்தி என்னை செதுக்கியவர்களில் முக்கியமான ஒருவர் நீங்களென்பதை எங்கும் சொல்வேன். வாழ்த்துகள் தோழரே. உங்களைப் போல் பலரைத் தந்த தளத்துக்கு என் நன்றிகள். தளத்தோழமைகளின் மனதில் நானும் இருக்கிறேன் என்பதில் இன்னும் பெருமை. அதற்காகத்தான் தோழமைகள் அனைவருக்கும் என் விருதினை சமர்ப்பணம் செய்தேன்.

வேலாயுதம் ஆவுடையப்பன் • 02-Nov-2016 7:34 am

விருது பெறும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .
அதற்கு வழிவகுத்த நண்பர் திரு அகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள் , நன்றி

இராசேந்திரன் • 02-Nov-2016 4:44 pm
பெரியோர்களின் ஆசிகள், வழி நடத்தல்கள் இல்லையென்றால் நான் இருப்பது நிச்சயம் என் கிராமத்திலிருப்போர்களைத் தவிர யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.. தங்களுக்கு என் நன்றிகள்.

rழனி குமார் • 02-Nov-2016 7:05 am
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் திரு ராஜேந்திரன் அவர்களுக்கு. தாங்கள் மேலும் பல விருதுகளை பெற்று மேன்மேலு ம் சிறக்க வாழ வாழ்த்துகிறேன் .

விருது பெறும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .
அதற்கு வழிவகுத்த நண்பர் திரு அகன் அவர்களுக்கு பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள் , நன்றி

இராசேந்திரன் • 02-Nov-2016 4:42 pm
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அய்யா.

rஅன்னை பிரியன் மணிகண்டன் • 02-Nov-2016 5:45 am
வாழ்த்துக்கள் சகோதரரே

இராசேந்திரன் • 02-Nov-2016 4:40 pm
வாழ்த்துக்கு நன்றி சகோதரரே. நானும் உன் போன்றுதான் சாதாரணமானவன். எல்லோரின் ஆசிகள்தான் என்னை ஒரு நிலைக்கு உயர்த்திவருகிறது.
.

உதயசகி • 01-Nov-2016 10:21 pm
அகம் மகிழ்ந்த வாழ்த்துகள் அண்ணா...இன்னும் பல விருதுகளை வென்றிடுங்கள்....

இராசேந்திரன் • 01-Nov-2016
நன்றி தங்கையே...எங்கோ ஒரு மூலையில் இருந்த எனக்கு, உங்களைப் போல் எத்தனை சகோதரிகள், எத்தனை எத்தனை சகோதரர்கள், பெற்றோர்களைப் போல் வழி நடத்தும் பெரியோர்கள் இவர்களின் நெஞ்சங்களில் ஆசியில் எதையோ சாதித்திருக்கிறேன். இந்த ஊக்கத்தில் இன்னும் சாதிப்பேன்.

========================================================================================================

பழனிக்குமார் வாழ்த்துக்கள்

:படிக்க & பகிர்க
செம்மொழி பேசும் உள்ளங்களுக்கு
நம்மொழி சொற்களால் வாழ்த்துக்கள் !

உள்ளத்தில் உவகைப் பொங்கிட
உள்ளவரை வளமோடு நலமுடன்
மகிழ்சசியே என்றும் நிலைத்திட
வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துக்கள் !

மத்தாப்பு சிரிப்புடன் மிளிர்ந்திட
வானவெடி ஒளியாய் ஏற்றமுடன்
எழில்மிகு வாழ்வுப் பெற்றிட
எந்தன் நல் வாழ்த்துகள் !

பழனி குமார்

எழுதியவர் : எழுத்து தளம் (15-Jun-19, 8:59 pm)
பார்வை : 51

சிறந்த கட்டுரைகள்

மேலே