முதுமொழிக் காஞ்சி 81

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
முறையில் அரசனாடு நல்கூர்ந் தன்று. 1

- நல்கூர்ந்த பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், நீதி முறை இல்லாத அரசனது நாடானது வறுமையுடையதாகும்.

(இன்றைய ஜனநாயக நாட்டிலும் அப்படியே; ஆட்சி செய்யும் அமைச்சர்களும் அதிகாரிகளும் கடமையைச் செய்யாமல் தன்னலமே பேணுவதும் நாடு வறுமைக்குள்ளாகும்.)

முறை இல் - நீதி முறை இல்லாத, அரசன் நாடு - அரசனது நாடானது, நல்கூர்ந்தன்று -வறுமையுடையதாம்.

இயல்புளி கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. 545 செங்கோன்மை

நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும், 553 கொடுங்கோன்மை

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். 559 கொடுங்கோன்மை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jun-19, 5:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

மேலே