மீத்தேன் வேணும்

மீத'தேன்' வேணும்
■■■◆■◆◆◆◆◆◆◆
கண்ணு, சாமி, கருப்பையா...
@@@@@
என்ன பாட்டி?
@@@@
எனக்கு ஒரு ஆசைடா. நாங் குழிக்குப் போற நாள எண்ணிட்டு கெடக்கிறன். என்னோட ஆசையை நெறவேத்தி வையுடா கண்ணு.
@@@@@
என்ன ஆசைன்னு சொல்லு பாட்டி.
@@@@
நான் மலைத் தேன் உங்க தாத்தா வாங்கிக் குடுத்து அத ருசிச்சுப் பாத்திருக்கேன்.. உங்கப்பன் கொம்புத் தேன் வாங்கிக் குடுத்தான். அதும் நல்லா இருந்துச்சு. எங் கெட்ட நேரம் எங் கடைசிக் காலத்தில ரண்டு பேருமே இல்லை.
@###
சரி நான் என்ன செய்யணும்?
@@@@@@
செய்தில "மீத்'தேன்'", "மீத்'தேன்'"னு அடிக்கடி சொல்லறாங்க. நான் சாகறதுக்குள்ள அந்த மீத்'தேனை' ருசிச்சுப் பாக்கணும். என்ற ஆசையை நெறவேத்தி வைப்பயா சாமி.
@@@@@@
பாட்டி நாம மலைப்பகுதியில் வாழறோம். எனக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. நம்ம ஊர் பர்கூர் மலைமேல இருக்குது. இங்க மொத்தம் பத்துக் குடும்பங்கள். யாருமே படிச்சவங்க இங்க இல்ல. யாருகிட்ட விசாரிச்சு மீத்'தேன்' எங்க கெடைக்குதுன்னு தெரிஞ்சுக்கறது.
@@@@@
எங் கடைசி ஆசைடா சாமி.
@@@
தெரியுது பாட்டி. இங்கிருந்து பசுலதான் அந்தியூர் போகணும். அது வர்ற எடத்துக்குப் போகுணும்னா வனத்தில அஞ்சு மைல் நடந்து போகணும். இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க. நான் அந்தியூர் போயி அங்க மீத்'தேன்' கெடைக்குதான்னு விசாரிச்சு வாங்கிட்டு வர்றேன்.
@@@
மகராசனா இருடா சாமி.

எழுதியவர் : மலர் (16-Jun-19, 5:11 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 58

மேலே