இயற்கை
யுகம் யுகமாய் பகலவனாய் ஒளி பரப்பி
கருமமே கண்ணாயினார் என்பகற்கிணங்க
ஆதவன் நம்மை வாழவைக்க பயணிக்கிறான்
மண்ணுறுக சில வேளை காய்ந்தாலும்
கடலின் ஈரத்தை தன்னுள் வாங்கி மழைத்தரும்
கார்மேகமாய் மாறி மண்ணிற்கு மழைதருபவன் அவனே
ஜீவனுக்கு ஆதாரம் சூரியன் இவன்
தான் ஆற்றும் இப்பெருதவிக்கு இவன் நம்மிடம்
எதிர்பார்ப்பது ஏதும் இல்லையே
இரவின் இருளை நீக்கி நீல வானில்
வெண்ணிலைவாய் வந்து குளிர்தரும்
ஒளி பரப்பி நம்மை குளிரவைக்கிறான் சந்திரன்
இவன் நம்மிடம் எதிர்பார்ப்பது ஏதேனும் உண்டா , இல்லையே
சூரியனும் சந்திரனும் இயற்கை அன்னையின் இரு கண்கள்
நன்மை செய்வோர்க்கு மாறாக நன்மை செயாது போயினும்
தீமை செய்திடலாமா .................
ஆறறிவு படைத்த மனிதன் இயற்கைக்கு
அறிந்தும் அறியாமலும் தீமை செய்துகொண்டிருக்கிறானே
இயற்கையை அங்கஹீனம் செய்கிறான் தினமும்
காடுகளை அழித்து ......
நீர்நிலைகளை துள்ளடைத்து ...
நீரையும் விசும்பையும் மாசாக்கி ....
வாயில்லா ஜீவன்களை வதைத்து....
இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்
என்று மனிதன் இயற்கையில் தன் அன்னையை காண்பான்
அன்னை மீது பாசம் காட்ட