கூடுகளில் குலாவிய
ஆறோட அதில் நீரோட
ஆழத்தில் மீனோடு
அதைப் பிடிக்க
அடர்ந்த வால் நரி ஓட
நரியைக் கண்டு
அங்கு மேய்ந்த ஆடோட
ஆடோடு வந்த நாயோட
நாயின் கழுத்து மணியாட
மணியின் ஓசையால்
கொக்கு கொக்கரிக்க
கொக்கரிப்பைக் கண்டு
குருவிகள் குதுகலிக்க
கூடுகளில் குலாவிய - சிறிய
சிட்டுக்கள் சிறகடிக்க
சிறகு ஓசை கேட்ட வண்டுகள்
சில் ஓசையில் பாட்டிசைக்க
பாட்டொலி ஆற்றுப்பாதையில்
பலவாறு எதிரொலிக்க
பரவசமான பழ வகைகள்
பல கனிகளை உதிர்த்து வைக்க
நாற்பது ஆண்டுக்கு முன்
நான் கண்ட காட்சி இது
நய வஞ்சக மனிதர்களால் - ஆற்றின்
நலம் எல்லாம் கெட்டுடுச்சே.
---- நன்னாடன்.