தாயின் மரணம்

ஹாலில் படுக்க வைத்து இருந்தது ..கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள் .ஆறுமுகம் வருகின்றவர்களை சோகத்தோடு தன் இரு கைகளையும் நீட்டி தன் துக்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தார் வந்தவர்கள் இரு கைகளையும் ஆறுமுகத்தின் கைகளில் வைத்து உன்னுடைய துக்கத்தோடு நாங்களும் பங்கு கொள்கிறோம் என்று தெரிவித்துக் கொண்டிருந்தார்கள் ஹாலில் ஐஸ் பெட்டியில் தன் தாயுன் உடல் படுக்க வைக்கப்பட்டு இருந்தது பார்க்க பார்க்க அவனுடைய உள்ளத்தில் சோகம் நிரம்பிக் கிடந்தது. என்ன ப்பா அம்மா நல்லா தானே இருந்தாங்க. நல்லா தான் இருந்தாங்க உடம்புக்கு முடியல அதான் இறந்துட்டாங்க .இதே பதிலை எல்லோரிடம் சொல்லுகிற போது தன்னுடைய மனதில் ஒரு மூலையில் ஏதோ ஒரு குரல் இவனை குத்திக் கொண்டிருந்தது அடப்பாவி பொய் சொல்லுகிறாய் நீதானே கொன்றுவிட்டாய் நிச்சயமாக இல்ல.இருமிக் கொண்டே இருந்தார்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சோதனை செய்ததில் அவர்களுக்கு வயிற்றில் கட்டிகள் இருப்பது தெரிய வந்தது அதை பரிசோதித்த டாக்டர் இந்த கட்டியை பயாப்சிக்கு அனுப்புகிறோம் அது வந்த பிறகுதான் ரிசல்ட் தெரியும் .ஒருவேளை கேன்சராக இருக்கலாம் பயப்படவேண்டாம் பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார் .வீட்டுக்கு அழைத்து வந்து அம்மாவை அறையிலே விட்டுவிட்டு தன் மனைவியிடம் சொன்னார் கேன்சரா இருக்கலாம் என டாக்டர்சொல்கிறார் .தெரியல .பயமா இருக்கு அம்மாவுக்கு ஏதோ ஆயிடுமோ உடனே மனைவிசொன்னாள் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அம்மாவுக்கு கேன்சர் இல்லையா என்று தெரியாது ஒரு பக்கம் இருக்கட்டும் ஒருவேளை கேன்சர் இருந்தா நம்ம குழந்தைகள் பாதிச்சிடக்கூடாது.அதனால அவங்க தனியா ரூம் ல விட்டுடுங்க அவனுக்கும் சரியெனப்பட்டது அம்மாவை அறையில் படுக்க வைத்துவிட்டு அம்மா இங்க ரெஸ்ட் எடுத்துக்கோ என்று சொன்னார் அன்று இரவே அவசரமாக வேலை விஷயமாக பெங்களூருக்கு சென்றவன் பத்து நாள் கழித்து வந்து பார்த்த போது அம்மா இறந்து கிடந்தாள்.ஒரு கடிதம்இருந்தது. பயாப்சி ரிப்போர்ட் உன்னுடைய மனைவி வாங்கிக் கொண்டு வந்தாள். அதை படித்து சொன்னாள்.அதில் கேன்சர் இல்லை என்று வந்திருக்கிறது மகனே கேன்சர் இருக்கா இல்லையா என்று தெரியாத போதே என்னை தனி அறையில் ஒதுக்கி வைத்து விட்டாயே !ஒருவேளை எனக்கு கேன்சர் இருந்து இருந்தால்எங்காவது சாலையில் கொண்டு போய்விட்டு விட்டு இருப்பாயா? எந்த குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்றாலும் ஒரு தாய் தன் குழந்தைக்கு என்ன வியாதி வந்தாலும் அந்தத் தாய் அந்தக் குழந்தையை மார்போடு நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறார் ஆனால் தாய்க்கு வந்தால் மட்டும் ஏன் தனிமைபடுத்துகிறாய் மனம் பொறுக்கவில்லை உணவு அருந்தாமல் நம்முடைய இலக்கியத்தின் படி வடக்கிருந்து இறத்தல் என்ற முறைப்படி நான் பத்து நாளாக உணவு உண்ணாமலேயே உன்னை விட்டு பிரிகிறேன் .மகனே உன் மீது எனக்கு கோபம் இல்லை .நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தார் குமுறி குமுறி அழுது கொண்டிருந்தார்அந்தத் தாயின் இறுதிச் சடங்கு முடியும் வரை.

எழுதியவர் : (4-Jul-19, 10:47 am)
சேர்த்தது : ராமஜோதி சு
Tanglish : thaayin maranam
பார்வை : 174

மேலே