நற்றமிழில் கற்பது எமது பெருமை

குற்றம் குறையில்லா மனிதர்கள் இல்லை
குறையோடு மனதில் எவரும் பிறப்பதுமில்லை

பெற்றவர் பிழைகள் பிள்ளைகளில் பலனாகும்
நற்ற நாற்றின் விளைவிலது புலனாகும்

பற்றற்றவர் என்று எவரும் இல்லை
பற்றுகள் இல்லாது வையம் சுழல்வது இல்லை

பெற்றச் செல்வம் செழுங்கிளை தாங்க
கற்றக் கல்வி குவலயம் ஓங்க

தொற்றும் வியாதி புகழ் போதை
தோற்றத்தில் மயங்காதார் அறிவு மேதை

நற்றமிழில் கற்பது எமது பெருமை
வேற்றாகி தடுக்க எவர்க்குமில்லை உரிமை!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (5-Jul-19, 12:17 pm)
பார்வை : 57

மேலே