எழுந்தே வருவேன்
இடிந்து விடுவேன்
என்று நினைத்தாயோ?
மடிந்து விடுவேன்
என்று நினைத்தாயோ?
துடி துடித்து இறந்து
விடுவேன் என்று நினைத்தாயோ?
துன்பப் படியில் அமர்ந்து
விடுவேன் என்று நினைத்தாயோ?
விசம் அருந்தி விடுவேன்
என்று நினைத்தாயோ?
இல்லை மலை ஏறிக் குதித்து
விடுவேன் என்று நினைத்தாயோ?
முயற்சியை நிறுத்தி
விடுவேன் என்று நினைத்தாயோ?
மனப் பயிற்சியை முடித்து
விடுவேன் என்று நினைத்தாயோ?
கண்ணீரில் சிறைப் பட்டு
விடுவேன் என்று நினைத்தாயோ?
தண்ணீரிலே மூழ்கி விடுவேன்
என்று நினைத்தாயோ?
துயரத்தில் சோர்ந்து விடுவேன்
என்று நினைத்தாயோ?
இன்பத்தை தொலைத்து
விடுவேன் என்று நினைத்தாயோ?
நீ நினைப்பது தவறு அப்படி நினைத்தால் அவ் நினைவு தனை உதறு /
வீழ்வதே எழுவதற்காகவே
என்று நினைப்பவள் /
ஏமாற்றம் கொள்வது திறன் பட
மாற்று வழி தேடவே என்று எடுப்பவள் /
மறுக்கப் பட்டால் இன்னும் ஓர் சிறப்பு வாழ்வு திறக்கப் படும் என்று உரைப்பவள்/
கேலியை வேலிக்குப் புறம்பாய்
கிடத்தத் துடிப்பவள் /
சகுனியாய் செயல் பட மறுப்பவள் /
மன உறுதி என்னும் உரமிட்டு /
தலை நிமிர்ந்து நடை போடவே நினைப்பவள் /
பெருக்கெடுக்கும் கண்ணீரை சுட்டு
விரல் கொண்டு தொடைத்து விட்டு /
வறண்ட நாவுக்கு தண்ணீரை
அருந்தி விட்டு /
சிறு புன்னகையைக் கொண்டு பெரும் துயரையும் மறைப்பவள் /
புறம் பேசி புற முதுகில்
வீசும் எண்ணத்தை வெறுப்பவள் /
இடிந்து வீடுவேன் என்று நீ நினைக்காதே /
நிலம் தாக்கி மரம் எரிக்கும் மின்னல்
இடி போல் எழுந்தே வருவேன் /