அறிவால் செய்யும் தப்பை
அறியாமல் செய்யும் தப்பை - மனம்
அறிந்தாலே உடலும் அதிரும்
அறிவால் செய்யும் தப்பை - பிறர்
அறிந்தாலே சினம் நம்மை சூழும்
அறிவார்ந்த ஆட்களாலே இன்று
ஆல் போல் ஆச்சுது தவறு
அறியாதவன் பெயரை வைத்து - குற்றம்
ஆங்காங்கே வளருது செழித்து
அறிவார்ந்தவன் தப்பு எல்லாம்
அனல் பட்ட சருகாய் மாறுது
அறியாதவன் செய்யும் தவறோ
ஆறு வருட தண்டனையில் முடியுது
அனைவரையும் காக்கும் சட்டமோ
அப்பப்போ அயர்ந்து உறங்குது.
----- நன்னாடன்.