இலியிச்சின் கடிதங்கள் சில தகவல்கள்

வணக்கம்.

இலியிச்சின் கடிதங்களை முற்றாக நான் வாசித்தேன்.

அவை கிருஷ்ணன் மேனன் சொல்லியபடியே வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு நண்பர்களுக்கு எழுதி இருக்கிறான்.


இன்னும் சில நண்பர்களின் பெற்றோருக்கும்  கூட எழுதி இருப்பதும் தெரிகிறது.

அவைகளை காலவரண்முறைப்படி தொகுக்கும்போது சிக்கல்கள் உருவாகின்றன. இலியிச் பெரும்பாலும் தேதி குறிப்பிட்டும் இருக்குமிடம் குறித்தும் குறிப்பிட்டு எழுதவில்லை.


மேற்கோள்களை தன் நினைவில் இருந்தே அவன் எழுதியிருக்கிறான்.
இலியிச் தன் வாசிப்பில் இருந்தும் சந்திப்புகளில் கிட்டிய அனுபவத்தில் இருந்தும் தன் சிந்தனையில் பலமாய் தாக்குதல் உண்டாக்கிய செய்திகளில் இருந்துமே கடிதத்தில் சொல்ல வேண்டியதை சொல்லி இருக்கிறான்.

பல இடங்களில் தன் சொந்த கருத்துக்களில் இருந்து முற்றிலும் எதிர்நிலை இலியிச் எடுப்பது வியப்பை தருவதோடு இன்றி கண்கொள்ளா காட்சியாகவும் இருக்கிறது.

அதில் பலவும் வயதில் இளையவர்க்கு ஆணித்தரமாக சொல்வது போல் முதிர்ந்தவருக்கும் சொல்ல மறுப்பதை போலவே இருக்கிறது என்னளவில்.

அவனே ஒருநாள் இதை ஏன் எழுதினேன் என நமக்கு சொன்னால் மட்டுமே புரியும் என்பதுபோலவும் ஒரு சில கடிதங்கள்.

முடிந்த அளவில் இவைகளை ஒவ்வொன்றாகவோ அல்லது மொத்தமாகவோ பதித்து விடுகிறேன்.


கடிதங்கள் இலியிச் பிறருக்கு எழுதி இருப்பதால் என் சொந்த கருத்தை அதில் தெரிவிக்க முடியாது. இதற்கு மன்னிக்கவும்.

நாம் இணைந்து அதுபற்றி பேசுவது என்பது எந்த பிழையும் இல்லை. ஆகவே நாம் இது குறித்து பேசலாம்...

மிக்க அன்புடன்
ஸ்பரிசன்.

எழுதியவர் : ஸ்பரிசன் (16-Jul-19, 5:48 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 11

மேலே