காதல் என்னும் மின்னல்

கட்டழகால் கடைந்தெடுத்த
கன்னி அவள் என்னைக் காண

காதல் என்னும் மின்னல்
கண் வழியே மின்ன

சில்லென்ற உணர்வால் உடல்
சிலிர்ப்பாகி மெல்லத் துள்ள

சிவந்த நிறத்தாளோ சிட்டாய்
என்னருகில் பட்டென நிற்க

ஆகாயம் என்னை தூக்கி
அலேக்காக வீசியதைப் போல

அத்தனை உணர்வும் ஆர்த்தெழ
அடங்கினேன் உணவற்ற உடலாய்

இதயமோ இருபது யானைகள்
இழுத்ததைப் போல் இறுக

இன்பமோ இனிமை நினைவோ
எதுவென்று உணர முடியா நொடியில் உழன்றேன்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (17-Jul-19, 8:44 pm)
பார்வை : 435

மேலே