மகத்தான மாமனிதர் - அப்துல் கலாம்

கடைக் கோடி வாழ் மக்களும்
கண்ணில் கண்ணீர் சொட்ட
உந்தன் உயர்வுதனை நினைக்கின்றார் இன்று.

கற்ற கல்வியின் பெரும் பயனாய்
கைகொண்ட காரியத்தில் உயர்வின் உச்சத்தை தொட்ட மகன் நீ!

எளிமைக்கு உயர்வாய்
பொறுமைக்கு சிகரமாய்
உண்மைக்கு எடுத்துக் காட்டாய்
நேர்மை வழி பேராற்றலின் பேரறிவாய் வாழ்ந்த மகன் நீ!

நிலைமைகளை மாற்றவே
தணியாத வேகத்தால்
தனியொரு சக்தியாய்
தகை சேர்த்த பேராசான் நீ!

உயர்பதவி ஏற்ற போது
உலகமெலாம் தலை வணங்கி பார்த்தது,
அப் பதவியே உன் சிறப்பால்
தனிச் சிறப்பானது.

காலங்கள் எத்தனை கடந்தாலும்
கலாம் என்ற மாமனிதனின்
சகாப்தம் சாகா வரம் பெறுமே.
சத்தியமாய் என்றைக்கும் எல்லோரும்
மறக்காமல் நினைவில் வைத்திடும் மா மனிதன் நீ!

எழுதியவர் : arsm1952 (27-Jul-19, 5:06 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 82

மேலே