எனது பார்வையில் சினிமா

யாரையும் உயர்த்தலாம்
யாரையும் தாழ்த்தலாம்
மாநிலம் இல்லை மதங்களும் இல்லை
திறமைகள் இருந்தால் நீ வெற்றியின் பிள்ளை

ஆரம்பம் குழந்தைபோல் இருக்கும்
நடுவில் கொஞ்சம் சிணுங்களாக இருக்கும்
தவழும் குழந்தைபோல் உரைநடை இருக்கும்
தள்ளாடும் கிழவன்போல் பல காட்சிகள் இருக்கும்

முந்தானை வெட்கம் படுவதே இல்லை
உன் முகமட்டும் ஏன் வெட்கப்படுகிறது என்றதுபோல்
காதல் காட்சிகளும் இருக்கும்

நீ உணர்ச்சிகளை தருகிறாய்
உருவங்களை கலை நயம் செய்கிறாய்
பாசங்களையும் வேஷங்களையும் பகிர்வினை செய்கிறாய்

இயற்கைகளை பாடலாக்குகிறாய்
நல் இதயங்களை காதலாக்குகிறாய்
உரைநடை உவமைகளை எடுத்துரைக்கிறாய்
உழவன்போல் வரிகளை தூவி கவிதையாக்குகிறாய்

உன் காட்சிகளின் வேறுபாட்டை
என் கண்ணீர் சொல்லும்
நீ அழகிய காட்சிகள் தருவதால்
எந்தன் கண்களும் மின்னும்

ரசிப்பவனுக்கு அது சினிமா
நேசிப்பவனுக்கு அதுதான் உயிர்மா
வரலாறை படிப்பதைவிட
வரலாறாய் பார்ப்பதுதான் சினிமா

எழுதியவர் : (28-Jul-19, 10:54 pm)
பார்வை : 52

மேலே