வண்ணக் கொடிபறக்கும் பொன்வசந்தக் காற்றினில்

நீண்ட வயதிலும்தண் டூன்றிப்போ ராடினார்
பெற்றோம் சுதந்திரம் நாம்

ஊருகூடிக் கொண்டாடும் இந்த விடுதலையில்
வாழும் மனிதம் உயர்ந்து

நேற்று கிடைத்தது போராட்டத் தின்பரிசு
இன்றுவாழ்வோம் பேதம் மறந்து

வண்ணக் கொடிபறக்கும் பொன்வசந்தக் காற்றினில்
நெஞ்சுயர்த்தி நாம்வணங்கு வோம்

காந்திநேரு நேதாஜி வஉசி நன்றியில்
நீநினை இந்நன்னா ளில்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Aug-19, 10:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே