மடிப்பிச்சை
ஆண் பிள்ளை என்றால் மஞ்சள் சட்டை, கால்சட்டை. பெண் பிள்ளை என்றால் மஞ்சள் சேலை அல்லது மஞ்சள் பாவாடை சட்டை.
புளியங்குடி பேருந்து நிலையத்தில் நின்றிருந்தேன்.
கிட்டத்தட்ட 14 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் என் முன்னால் வந்து, " அண்ணே! படிப்புச் செலவுக்காக கஷ்டப்படுறேன். உங்களால் முடிந்ததை கொடுங்கள். ",என்றார்.
அண்ணன் வேற சொல்லிவிட்டார். உடனே பத்து ரூபாயை எடுத்து கொடுத்து விட்டேன்.
அன்று நான் எதையும் கவனிக்கவில்லை.
பேருந்து வந்ததால் கிளம்பிவிட்டேன்.
மற்றொரு நாள் அதே பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு கடையில் நின்றிருந்தேன்.
அப்போது மஞ்சள் சேலை கட்டி ஒரு பெண்மணி வந்தார்.
24 வயதிருக்கும்.
என்னிடம், " அண்ணே! என் படிப்பு செலவுக்காக ஏதாவது உதவுங்கள். ",என்றார்.
உடனே ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டுவிட்டு, நின்றிருந்தேன்.
அருகில் உள்ள கடைக்குச் சென்ற அந்த பெண் மாரியம்மன் கோவிலுக்கு மடிப்பிச்சை எடுப்பதாக பணம் கேட்டார்.
அந்தக் கடைக்காரரோ, ஒருநாளைக்கு எத்தனை பேருக்குத் தான் கொடுப்பது என்றபடி இரண்டு ரூபாயைப் போட்டார்.
மற்றொரு நாள் ஒரு 10 வயது சிறுவன் அதே பாணியில் பணம் வசூலித்தான்.
எதற்காக இப்படி? நான் கேட்கவில்லை.