தாடி

முகம் ஏதும் தேடவில்லை
வரம் ஏதும் கேட்கவில்லை
முகமொடு ஒன்றை ஆனாய்
முகத்திற்கே துணையாகி போனாய்
சில பேருக்கு அடையாளம்
சில பேருக்கு எட்டாக்கனி
சில பேருக்கு அழகு
சில பேருக்கு வேண்டாவெறுப்பு
சில பேருக்கு ஆசை
சில பேருக்கு வீரம்
ஆனால் ஏனோ சில பேருக்கு மட்டும் உறவாகி போனாய்

யோசிக்கும் போது மட்டும்
உன் ஞாபக வரும்
யோசிக்க வைத்ததோ இல்லையோ
நேரங்கடத்த உதவியது

உன்னை வைத்து போட்டியும் நடக்கும்
ஜெயிப்பது யாராயினும் இருப்பது நீயே....
என் இளமையின் முதல் துணைவன் நீ
என் சோகத்தை பிரித்துக் கொண்ட தூயவன் நீ

அடிக்கடி உன்னை சலூனில் விட்டுச்செல்கிறேன்
நீ முகவரி அறிந்து வந்திடுவாய் என்ற நம்பிக்கையில்
விட்டுச்செல்கிறேன் ...

எழுதியவர் : கா.மணிகண்டன் (19-Aug-19, 9:51 pm)
சேர்த்தது : மணி ராக்ஸ்
Tanglish : thaati
பார்வை : 350

மேலே