அகாலமான என் அம்மா……

தளிர்கொய்து கூடைகள் நிரப்பியபோது
உங்களிடம்
மரங்கள் தோற்றன….
ஏற்றங்கள்; மிதித்து
உயரங்கள் கடந்தபோது
உங்களிடம்
மலைகள் தோற்றன….

நின்று நிமிர்ந்த
விருட்சங்களைச் சாய்ப்பதாய்ப் புறப்பட்டு
நாணல்களை விழச்செய்த புயல்போல
தீவிரவாதிக்குக் குறிவைப்பதாய் அவசரப்பட்டு
அன்று பிறந்த
சிசுவை ரணமாக்கிய ராணுவம்போல
உங்களைக் கொன்று
மரணமும்
உங்களிடம்
தோற்றுத்தான் போனது!
- மீனாள்சொல்வன்

எழுதியவர் : மீனாள்செல்வன் (26-Aug-19, 12:11 pm)
சேர்த்தது : மீனாள்செல்வன்
பார்வை : 161

மேலே