மருத்துவ மகத்துவம்

நெல்லை பேட்டை
இவரது கோட்டை
வசிப்பது கோரிப்பள்ளம்
பாளையங்கோட்டை...
அவர்..பணி நிறைவு தமிழ்நாடு
மின் செயற்பொறியாளர்
சீர்மிகு திறன்மிகு நேர்மிகு
திருமிகு ஆர். சந்தானகுமார் அவர்கள்...

அவர்களின் அன்புமிகு மனைவி
திருமதி ஜெயந்தி...
இத்தம்பதியின் அன்பு மகன்
டாக்டர் பிஎஸ் சாய்ராம்...

இவர் ஓமன் நாட்டு இந்தியப்பள்ளியில்
ஆரம்பக்கல்வி கற்றவர்...
பாளையங்கோட்டை
ரோஸ்மேரியில்
பள்ளிக்கல்வி கற்றவர்..

மணமகன்...
டாக்டர் சாய்ராம்
கடின உழைப்பில்
சாயாத ராம்... இவர்
எம்பிபிஎஸ் படித்தது
மதுரை மருத்துவக் கல்லூரி...
பொது மருத்துவத்தில்
எம்டி படித்தது நெல்லை
மருத்துவக் கல்லூரி...
சாய்ராம்... படிப்பில் சிறந்தவர்
பண்பில் உயர்ந்தவர்...

இந்த அறிவுச் சிலை
தன்னைச் செதுக்கிய
சிற்பிகளோடு சேர்ந்து
தானும் தன்னை அழகாய்ச்
செதுக்கிக் கொண்டது
எல்லோரும் இவரை
விரும்பும் வண்ணம்...

இந்திய விமானப்படை
உயரதிகாரி... மாஸ்டர்
வாரன்ட் ஆபிஸர் பதவி வகிப்பவர்...
அஸ்ஸாம்.. புனே
நாசிக்.. பஞ்சாப் ஆதம்பூர்..
கிழக்குத் தாம்பரம்..
குஜராத் ஜாம் நகர்..
சண்டிகார்.. ஆகிய
விமானப்படை தளங்களில்
பணியாற்றி தற்போது
ஆவடி விமானப்படை
நிலையத்தில் பணியாற்றுபவர்...
உயர்திரு மாரிமுத்து...

ராஜபாளையம் தளவாய்புரம்
இவருக்கு ஊர்... அங்கும்
அவருக்கு நல்ல பேர்...
திரு மாரிமுத்து அவர்களின்
மனைவி திருமதி மாரியம்மாள்...

மாரிமுத்து மாரியம்மாள்
தம்பதியரின் அன்புமகள்
மணமகள்
திவ்ய பாரதி...
பாட்டுக்கொரு புலவர் பாரதி
வகுத்த பெண்மைக்குச்
சொந்தக்காரர்
டாக்டர் திவ்ய பாரதி...
திவ்ய பாரதி.. இவர்
மிகவும் திவ்யமான பாரதி...

டாக்டர் திவ்ய பாரதி
பள்ளிக்கல்வி பயின்றது
புனே.. நாசிக்.. பஞ்சாப்
ஆதம்பூர்.. சென்னை சேலையூர் பள்ளிகளில்..
மருத்துவக்கல்வி எம்பிபிஎஸ்
பயின்றது தூத்துக்குடி
அரசு மருத்துவக் கல்லூரி...
காது மூக்குத் தொண்டை
உயர் மருத்துவம் எம்எஸ்
பயில்வது தெலுங்கானாவில்...

திவ்யா இவர் இன்னாரிடம்
இப்படி பழக வேண்டும்
என்பதில் இமயம்...
நற்குணத்தில் சிகரம்...
படிப்பில் பண்பில் வெகு உயரம்...

இனிய புதுமணத் 
தம்பதியரே... 
முதன்மையானவற்றை  
முதலாய்ச் செய்து...  
முடிவினை மனதில் வைத்த 
ஆரம்பம் கொண்டு...  
செயல்களை முந்திச் செய்து...  
புரிந்தபின் புரியவைத்து...  
ஜெயிக்கவிட்டு ஜெயித்து...  
ஒன்று பட்டு உழைத்தால்  
ஐம்பதும் ஐம்பதும் நூறல்ல
அதற்கும் மேல் என்பதறிந்து...  
வெற்றிகளை நோக்கிய பயணத்தில் 
கத்திகளை வெல்லும் 
கூர்மையான புத்தியும்  
ஆகிய ஏழு ஸ்வரங்களின்  
இனிய ராகங்களில்...  
வழிகளும் வானமும் வசப்படட்டும்... 
வசந்தங்கள் வரமாகட்டும்... 

இல்லறப் பூங்காவில் 
உலா வரப்போகும் 
உல்லாசப் பறவைகளே! 
செல்வங்கள் பதினாறும் பெற்று 
இனிதே வாழ்க... 
இன்பமாய் வாழ்க!! 
நீடூழி வாழ்க... 
நிலைத்த புகழோடு வாழ்க!!! 
பல்லாண்டு வாழ்க..
பார் போற்றிட வாழ்க...

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (29-Aug-19, 6:49 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 103

மேலே