மழைக்கும் மழைக்கும் கல்யாணம்
டேய் பத்து, அடுத்த மாசம் மழைக்கும் மழைக்கும் கல்யாணம் நடக்கப் போகுதாம்
@@@@@
அட கெத்து, மழை பெய்ய வேண்டி கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான் ஐதீகம். மழைக்கும் மழைக்கும்..... உம் ஒரு மண்ணும் புரிலடா கெத்து.
@@@@
நம்ம தெருவில இரட்டைப் பிறவிகள் இருக்கிறாங்களே அவுங்க பேரென்ன?
@@@@@
ஏன்? உனக்குத் தெரியாதா?
@@@@
தெரியும். நீயே சொல்லுடா.
@@@@@@
பர்ஷா (Barsha), வர்ஷா (Varsha).
@@@@@@
அவுங்க ரண்டு பேருக்கும் வெளிநாட்டில வேலை பார்க்கிற மாப்பிள்ளைங்களாப் பாத்து நிச்சயதார்த்தம் பண்ணீட்டாங்கடா. ஒரே மணமேடையில இரட்டைங்களுக்குக் கல்யாணம்.
@@@@@
மிக்க மகிழ்ச்சிடா. சரி அவுங்க கல்யாணத்துக்கும் மழைக்கும் என்னடா சம்பந்தம்
@@@@@@@
பர்ஷா, வர்ஷா இரண்டுமே இந்திப் பேருங்க. அந்தப் பேருங்களுக்கு தமிழ் அர்த்தம் என்னன்னு சொல்லுடா பாக்கலாம்.
@@@@@
நூத்துக்கு தொண்ணூறு தமிழ்க்
கொழந்தைங்க பேரு இந்திப் பேருங்களா இருந்தாலும அர்த்தம் தெரிஞ்சு பேர் வைக்கிற பெற்றோர்கள் அஞ்சு சதவீதம்கூட இருக்கமாட்டாங்க. 'பர்ஷா', "வர்ஷா'வுக்கு நீயே அர்த்தம் சொல்லுடா.
@@@@@@
இரண்டு பேருங்களுக்கும் ஒரு அர்த்தம்தான்டா.
@@@@@@
என்ன அர்த்தம்?
@@@@@@
'மழை'ன்னு அர்த்தம்.
@@#@@@
ஓ..... அதான் நீ "மழைக்கும் மழைக்கும் கல்யாணம்"னு சொன்னியா?
@@@@@
ஆமாம்டா சி, சி
@@@@@
என்னடா 'சி, சி'?
@@@###
இப்பெல்லாம் தமிழ் உரையாடல்ல "சொல்லுங்க ஜீ, சரிங்க ஜீ"ன்னு சில அன்பர்கள் பயன்படுத்தறாங்க. அதத்தான் நான் 'சி, சி'ன்னு சொன்னேன்.
@@@@@@
சரி சி
■■■■■◆◆■■■■■■■■■◆◆◆◆■◆◆■■◆◆■■
Varsha = rain
Barsha = rain