சிறகுகள்
பட்டாம் பூச்சிப் பறந்தால் வானில்
பற்றிப் பிடிக்கப் பேரவா வருமே,
விட்டு விட்டால் பள்ளிக் கூடம்
விடலைப் பிள்ளைகள் விரித்திடும் சிறகை,
திட்டம் எதுவுமே யிலாமல் தானே
திரண்ட செல்வ வரவது வியப்பே,
கிட்டிடும் காதலி ஒப்புதல் மனசைக்
கூடுதல் சிறகை யடிக்க வைக்குமே...!