நகைசுவை

அது ஏங்க?????

அந்த கட்டிடத்தில் பல முதியவர்கள் வசித்து வந்தார்கள்.அவர்கள் வாரம் ஒரு தடவை சந்தித்து
ஏதாவது பேசி வருவார்கள்.சிலர் பத்திரிக்கையில் வந்த கதையை பற்றி சொல்லுவார்.சில
முதியவர்கள் அரசியல் நிகழ்சசி பற்றின செய்திகளை சொல்லுவார்.

அன்று நடந்த முதியவர்கள் கூட்டத்தில் சில இளம் வயது பையன்கள் வந்து இருந்தார்கள்.
ஒரு பெரியவர் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.நான் அதை இப்போ கேக்கறேன் என்று
சொல்லி விட்டு ' நான் என் தலைக்கு ரொம்ப விலை ஒசத்தியான தைலங்ககளை எல்லாம் தடவி
வறேன்.ஆனா தலை முடி கொஞ்சம் கூட வளர மாட்டேங்குது.ஆனா நான் ஒன்னும் தடவாத
காத்து, மூக்கு,புருவம் தாடி மீசை மட்டும் தினமும் வளந்து கிட்டே வருது. அது ஏங்க/" என்று
கேட்டார்.

வழுக்கை தலை இருக்கும் எல்லா பெரியவர்களுக்கும் இது ஏற்படுவதால் அவஙக ஒன்னும்
சொல்லாம " ஆமாம் நீங்க சொல்றது ரொம்ப சரிங்க" என்று சொல்லி விட்டு யோஜனை பண்ணிக்
கொண்டு இருந்தார்கள்.

ஒரு இருபது வயது வாலிபன் " எனக்கு அதுக்கு காரணம் தெரியுங்க" என்று சொல்லி ஒரு நமுட்டு
சிரிப்பு சிரித்தான்.

கேள்வி கேட்ட பெரியவர் " உனக்கு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லேன் தம்பி "என்று ஆரவத்தொடு
கேட்டார்.மற்ற வழுக்கை தலை பெரியவர்களும் அந்த வாலிபன் சொல்லப் போகும் பதிலை கேட்க
ஆர்வமாக அந்த வாலிபன் வாயயை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அந்த பையன் காரணத்தை சொல்லி விட்டு ஓட தயாராக இருந்தான்.

அந்த பையன் " அது ஒன்னும் இல்லே பெரியவரே.நீங்க தடவி வரும் ஒசத்தியான தைலம் உங்க
தலையிலே நிக்காமே வழிஞ்சி உங்க புருவம், காது, மூக்கு, கன்னம் இதுகள்ளே வந்து விழுந்துடுது
அதனால்லே தான்" என்று சொல்லி விட்டு ஓடியே போய் விட்டான்.

கேள்வி கேட்ட பெரியவர் முகத்தில் ஒரு கிலோ எண்ணை வழிந்தது ,

எழுதியவர் : ஜெ சங்கரன் (9-Sep-19, 10:21 am)
சேர்த்தது : Sankaran
Tanglish : nagaijuvai
பார்வை : 228

சிறந்த நகைச்சுவைகள்

மேலே