வாழ்வும் சதுரங்கமும் பகுதி 4 - குதிரை

வாழ்வும் சதுரங்கமும் பகுதி -4

குதிரை

தடைகளை தன்
புத்தி கூர்மையாள்
எளிதில் கடக்கும்
ஒரே ஒரு வீரன்

ஆடுகளத்தில் இவன்
நின்றாலே எதிரிக்கு
பயம் அதிகரிக்கும்
எதிரி முதலில் வீழ்த்த
நினைப்பதும் இவனையே

ஏனென்றால் ராஜாவை
இவன் எதிர்க்கும் போது
மட்டும் ராஜாவின்
நிலைப்பாடு தடுமாறி
தன்னை காக்க
வேறு இடம் செல்வான்

வெட்டு ஒன்று துண்டு இரண்டு
என்றாலும் சரி அல்லது
செய் அல்லது செத்து மடி
என்றாலும் சரி அனைத்தும் பொருந்தும்

குதிரையின் தேடல்
தன் குடும்பத்திற்காக
காடு மலை கடப்பவன் போல
இருக்க நிலையான
இடமின்றி திரிபவன் போல

இவன் வாழ்வை நோக்கி
மற்றவர்களை காட்டிலும்
அதிகம் பயணிப்பவன்
புதுமைப்பித்தனைப் போல

இலக்கை அடைய
பல தேடல்கள்
பல தடைகள்
சில சமயம் சூழல்
அவனை முடக்கி
ஆரம்ப நிலைக்கே
தள்ளப்படுபவான்
பல கோணங்களிலும்
அடிபட்டு

வெளிநாட்டு வாழ்வில்
ஏமாற்றம் கண்டு
வீட்டில் முடங்கி கிடக்கும்
நண்பனைப்போல

பல வசீகர பேச்சால்
பண மோகம் கொண்டு
இறுதியில் அனைத்தையும்
இழந்த உறவைப்போல தான்
இந்த குதிரைகள்

பல கோணங்களில்
வாழ்வை பார்த்தவர்கள்
பல இடம் பெயர்ந்தவர்கள்
முடங்கினால் மற்றவர்களை
போல எளிதில் உடைந்து
விட மாட்டான்

தெளிவாக தன்
அடுத்த பயணத்தையும்
தேடலையும் தொடர்வான்
ஏனென்றால் அவன்
வாழ்வில் அதிகம்
கடந்தவன் அதிகம்
பக்குவப்பட்டவன்
அவன் நிச்சயம்
வாழ்வில் ஓர் நாள்
வெற்றி கொள்வான்

எழுத்து சே.இனியன்

எழுதியவர் : சே.இனியன் (10-Sep-19, 3:46 pm)
சேர்த்தது : இனியன்
பார்வை : 126

மேலே