காதல்

அந்தி சாய் வேளை
மஞ்சள் போர்த்திய வானம்
வேளை நல்ல வேளை
காம ஸ்வரூபம்
கன்னியவள் அங்கம் தங்கம்
வானத்தின் மஞ்சள் தங்கம் அவள்
அங்கத்தில் இரண்டற சேர
பசுந்தங்க ரதமாய் பைங்கிளி
அவள் ஆடி வந்தாள் என்
நெஞ்சில் தங்கிவிட்டாளே
தங்க ரதமாய் , பூட்டி வைத்தேன்
அவளை என்னுள்ளத்தில்
காதல் பூட்டால் இனிதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Sep-19, 1:08 pm)
Tanglish : kaadhal
பார்வை : 58

மேலே