மஞ்சள் வானமும் அந்திப்பூக்களும் காத்திருக்கின்றன
அழுவதேனோ கண்ணே
கடந்து போன பிரிந்த
சோகங்களை நினைத்து....
அந்தி வானம் ஓவியம்
தீட்டும் இப்பொழுது
கண்ணீர் வடிப்பதோ ?
துடைத்துவிட்டுச் சிரித்திடுவாய்
தோகைமயிலின் தோழியே
மஞ்சள் வானமும் அந்திப்பூக்களும்
காத்திருக்கின்றன உன்னோடு சிரித்திட !