ஏனடி என்னை கொல்கிறாய்

ஏனடி என்னை கொல்கிறாய்....🌹🌹

கண்களால் என்னை கவருகிறாய்.
நன்றாக காதல் செய்கிறாய்.
பக்கத்தில் வந்தால் விலகி ஓடுகிறாய்.
பதில் கிடைக்காமல் என்னை புலம்ப விடுகிறாய்.

கயல் வழி கொண்ட
கந்தர்வ கன்னியே
கோமகன் உன் காதலுக்காக ஏங்குகிறேன்
உனக்கேன் இன்னும் புரியவில்லை.

உன் உதட்டோர புண்ணகையால்
உள்ளம் மகிழ்தேன்.
உன் கண்ணகுழியில் வழுக்கி விழுந்தேன்.
அருகே இருக்கும் அதரத்தை உரிமையுடன்
ஆர்பரிக்க ஆசைபடுகிறேன்.
உன் முடிவுக்காக தவம் கிடக்கிறேன்.

காதல் தீயை என் மனதில் ஏற்படுத்தி
அது சுடர் விட்டு அனையாமல் எரிய
எண்ணெய்யாய் நீ எனக்கு வேண்டும்.
காதல் பைங்கிளியே
உன் முடிவு தான் என்ன?

இதயத்தில் காதலை ஈட்டியன பாய்ச்சிவிட்டாய்.
என் இதயம் ரணமானது.
காதல் ரத்தமாக என் நெஞ்சிலிருந்து கொப்பளித்து உன்னை நோக்கி வருகிறது.
என் இதய ஓட்டத்தை சரி செய்ய உன்னை தவிர வேறு யாரால் முடியும்.

நாளை விடியல் நன்றாக இருக்கும்.
காலை பொழுது சந்தோஷமாக அமையும்.
நிச்சயம் கேட்பேன் உன்னிடம்.
தைரியமாக சொல்லிவிடு உன் முடிவை.
காலம் தாழ்த்தாதே
என் வாழ்க்கையின் முடிவு
உன் ஒற்றை சொல்லில்.

- பாலு.

எழுதியவர் : பாலு (15-Sep-19, 10:48 pm)
சேர்த்தது : balu
பார்வை : 272

மேலே