நிழல் எனும் அதிசயம்

நிழலுக்கு
உணர்ச்சிகள் இல்லை என்று
யார் சொன்னது ?

நிழலுக்கு
சிரிக்கவும் தெரியும்
அழகும் தெரியும்
கோபப்படவும் தெரியும்
வெட்கப்படவும் தெரியும்

நிழலுக்கும்
சுடிதார் அணிய தெரியும்
புடவை அணிய பிடிக்கும்
நவீன உடைகள் அணிய அடமும் பிடிக்கும்

நிழலுக்கும்
அடிக்க தெரியும்
திட்ட தெரியும்
முத்தமிடவும் தெரியும்

ஆயினும்
சூழ்நிலை கருதி
எப்பொழுதுமே நிழல்
உடன் வந்து கொண்டிருப்பதே இல்லை

சில நேரங்களில்
வீட்டிலும் அலுவலகத்திலும்
அடைபடத்தான் செய்கிறது
என்ன செய்ய
எப்பொழுதுமே உடன் வரும் வரத்தை
எல்லா நிழல்களும் பெறுவதே இல்லை

ஆம் இப்பொழுது கூட என் நிழல்

வீட்டில் சமைத்துக்கொண்டும்
விளையாடிக்கொண்டும்
படித்துக் கொண்டும்
தொலைக்காட்சியை ரசித்துக்கொண்டும்
இல்லை
என் குழந்தையோடு
விளையாடிக் கொண்டும் தான் இருக்கும் மனதில் என்னை
சுமந்த படி

ஆம் என் நிழலுக்கு
இன்னும் சில செல்லப் பெயர்களும்
இருக்கத்தான் செய்கிறது

குட்டிப் புள்ள
செல்ல குட்டி
அம்மு என பல
செல்ல பெயர்கள் இருந்தாலும்
உலகின் பார்வைக்கு
மனைவி எனும் அடைபெயருடன்

வீட்டில் எனக்காய்
காத்து கொண்டு இருக்கிறது
என் செல்ல நிழல்
மனைவியின்

எழுதியவர் : ந.சத்யா (18-Sep-19, 8:04 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 166

மேலே