இதனால் சொல்வது என்னவென்றால்
கிராமத்து குதூகல
எண்ணத் திமில்கள்
இனம்புரியா ஏக்கத்தோடே
சுற்றிச் சுற்றி
ஆலிங்கனம் செய்ய
ஊருணிக் குளியலுக்காய்
உள்ளம் எகிறிக் குதித்தது
அடுத்த நாள்
விடியும் போதே
புறப்பட்ட மணித்துளியில்
புதிதாய் சிமிட்டிய சிந்தனைகள்
சிந்தையில் உரைக்க
மறந்துபட்டேன்
மனதின் ஆசையை!
இதனால் சொல்வது
என்ன வென்றால்
இருந்ததைக் கடந்து
மாறியவை மாறியவையாகவே
இருக்கட்டும் - ஒரு நாள் அதுவும்
நிரம்பி வழியும் - அன்று
நான் நீச்சல் பழகிய
ஊருணியில்
நிலவொளியில் நீச்சலடிப்பேன்…
ஊருணி மட்டுமல்ல
உள்ளத்தின் அத்தனை ஆசைகளுமே…