கலகல வென்று சிரித்தாய்
நீரோடைத் துள்ளலில் நீந்திடும் மீன்கள்
நிலவொளி யில்பளிச்சி டும்நீர் அலைகள்
கரையில் ரசிக்கும்பூக் கள் !
பூவை வருடும் உனதிருபா தங்களை
வந்து கயல்கள் வருடிட நீமகிழ்ந்தாய்
வெள்ளிக் கொலுசை பொறியென்று கொத்த
கலகல வென்றுசிரித் தாய் !