புலனம் - Whatsapp
புலனம் இன்று புதுமையடா
புலன் ஆய்வு கூட இதன் வழியில் தெரியுதடா
தபால் இறந்து போனது
இதன் வழியில்தான் இன்று தகவல் வந்து போகுது
தொடர்புகள் எளிமையாகுது
சொந்தங்கள் இதில் இனிமை காணுது
நட்புகள் கூடி வாழுது
நடைமுறை விடயங்கள் நம்மை வந்து சேருது
காதல் எளிதாகுது
காதலர் வாழ்க்கை இதில்தான் வாழுது
காலம் சிறிதானது
காற்றும் இதை தேடுது
முகநூல் தூரமானது
முகம் பார்த்து பேச இது வழிகாட்டுது
கல்வி பரிமாற்றம் கருத்தியல் தந்து போகுது
கவிதைகளை அனுப்புவதற்கு இது எங்கள் நினைவாகுது
புகைப்படத்தை அள்ளித்தரும்
நெருப்பில்லா புலனம் இது
ஆடியோவும் வீடியோம் பறந்துவரும்
ஆனால் இதில் சிறகில்லை
ஆன்லயினும் அறிவியலும் இதன் பிள்ளை
ஆனால் இதற்க்கு பெற்றோர் இல்லை
வந்தது ஒரு வழி
தந்தது யாவர்க்கும் முகவரி
புலனம் இது புதுமைதான்
BY ABCK