அந்த நொடி

அந்தக் கணம் தான் நான் தேடும் கணம்,

அந்த நொடி தான் நான் இழந்த நொடி; கடைசியாக என் மனம் உறங்கிய தாய் மடி!

அந்தக் கசியும் கண்களின் நொடி!
பாதையில்லாத நரம்புக் காட்டுக்குள்
தொட்டாச்சிணுங்கி மீது விழுந்த முதல் மழைத்துளியின் நொடி!

அன்றெனக்குத் தெரியாது- அந்த முதல் துளிக்குள் ஒரு கண்ணீர் சுனாமி இருந்தது அன்றெனக்குத் தெரியாது!

அக்கண்கள் என் கண்களைத் தொட்டணைத் தூறும் மணற்கேணி செய்யும் என்று எனக்குத் தெரியாது!

(என்னவள் என் கரம் பிடித்து அழுததன் நினைவாக பின்னாளில் எழுதியது)

எழுதியவர் : பாபுகனிமகன் (8-Oct-19, 2:37 pm)
சேர்த்தது : Babu Ganison
Tanglish : antha nodi
பார்வை : 266

மேலே