தேடல்களில் புரிதல்கள் புரிதல்களில் தேடல்கள்

மின்காந்த மாடலிங் புத்தகம்...
அது படிப்பவர்களை...
இரும்புகளைக் காந்தமாய்
ஈர்க்கட்டும்...

எழுத்தாளர்...
லதா கிறிஸ்டிக்கு அது
நல்ல பெயர் சேர்க்கட்டும்...

பள்ளி துவங்கி கல்லூரி வரை
திகட்டாத தேனென...
கசடறக்கற்ற கல்வி
அழகிய மனதோடு
தங்கி விடாமல் உலகோடு
தங்கிட வைப்பது புத்தகம்...

அது கடலிலே வரும்
கப்பலுக்கு வழிகாட்டும்
கலங்கரைவிளக்கமாய்
படிப்போருக்கு வழிகாட்டட்டும்...

தென்றல்.... அது
தீண்டும் வரை இன்பம்...
நல்ல புத்தகம்... படித்த
பின்னரும் இன்பம்...

படிக்க சிலசமயம் நேரமிருக்காது...
நல்ல புத்தகம் கையில் எடுத்தால்
கீழே வைக்க மனமிருக்காது...

தங்கள் புத்தகத்தில்
தேடல்களில் புரிதல்கள்...
புரிதல்களில் தேடல்கள்...
வசப்பட வாழ்த்துக்கள்...
👍😃💐👏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (9-Oct-19, 1:43 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 479

மேலே