நீர்நிலை

நீர்நிலை

அன்புப் பெருக்கில் நீர்!
ஆனந்தக் களிப்பில் நீர்!

இன்ப நினைவில் நீர்!
இனிய உறவால் நீர்!

வெடிக்கும் விம்மலில் நீர்!கொடியோர் செயலால் நீர்!

பெருமிதப் பொங்கலில் நீர்!
துக்கம் மனத்தங்கலில் நீர்!

நன்றிப் பெருக்கால் நீர்!
நயந்து கெஞ்சலில் நீர்!

பரிவைக் கண்டால் நீர்!
பிரிந்து சென்றால் நீர்!

கண்டால்
வறண்ட நீர்நிலையைப்
பற்றிக்
கொள்ளும் ஏக்கம்!

கருநிறமலர்கள்
இரண்டும் சற்றும் வற்றா
நீர்நிலைத் தேக்கம்!

எழுதியவர் : Usharanikannabiran (12-Oct-19, 9:54 am)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 47

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே