குழந்தையும் ,தெய்வமும்
குழந்தையும், தெய்வமும்
குழந்தை உன்
கண்களின் மொழியால்
கொள்ளை போகிறேன்!
மழலை உன்
கைகளின் செய்கையால்
வியப்பில் ஆழ்கிறேன்!
மதலை உன்
குறுநகை கண்டு
குதூகலிக்கிறேன்!
குழவி உன்
கொஞ்சு மொழியில்
உலகை மறக்கிறேன்!
பிஞ்சு உந்தன்
சிறு சிறு குறும்பால்
நினைவு துறக்கிறேன்!
உன்னை கவனிப்பதை
ஒருமுகத்தவமாய்
நானும் உணர்கிறேன்!
உன்னில் உந்தன் கண்ணில்
ஒப்பிலா சிவத்தைக் காண்கிறேன்!