கலந்திருப்பதால்

வானம் பார்த்த பயிராய்
நான் இருக்கிறேன்
சேர்த்தணைத்த நிலமாய்
நீயிருப்பதால்
நிலத்திற்குள் ஊடுருவிய
வேராய் நானிருக்கிறேன்
நிலத்தடி நீராய் நீ
இருப்பதால்
அசைந்தாடும் புள்ளாய் நான்
இருக்கிறேன்
இசைப்பாடும் காற்றாய்
நீயிருப்பதால்
பசுமையாக நானும் பரவி
நிற்க்கிறேன்
அதில் பச்சையமாய் நீயும்
கலந்திருப்பதால்